செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பங்குச்சந்தையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான தகவலால் அனைவரும் வெளியேற்றம் | மலேசியாபங்குச்சந்தையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான தகவலால் அனைவரும் வெளியேற்றம் | மலேசியா

பங்குச்சந்தையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான தகவலால் அனைவரும் வெளியேற்றம் | மலேசியாபங்குச்சந்தையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான தகவலால் அனைவரும் வெளியேற்றம் | மலேசியா

0 minutes read

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் பர்சா மலேசியா கட்டிடத்தில், அந்த நாட்டின் பங்குச்சந்தை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த பங்குச்சந்தையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று மதியம் 12.01 மணிக்கு தகவல் வெளியானது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு வல்லுனர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர்.

அதைத் தொடர்ந்து பங்குச்சந்தையை அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு செயலிழப்பு படையினர் தேடினர். இறுதியில் அங்கு வெடிகுண்டோ, வெடிபொருட்களோ வைக்கப்படவில்லை, வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல், வெற்று மிரட்டல் என தெரியவந்தது. அதன் பின்னரே அனைவரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

3 மணிக்கு பின்னர் வழக்கம்போல பங்கு வர்த்தகம் தொடர்ந்ததாக பர்சா மலேசியா தலைமை செயல் அதிகாரி தாஜூதீன் ஆதன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் மலேசிய பங்குச்சந்தையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.