சீனா நாட்டில் பணத்திற்காக பெற்றோரை கொலை செய்த மகன், தனது குற்றத்தை மறைக்க அருகில் குடியிருந்த 17 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் கிராமத்தில் பெற்றோருடன் யங் குயிங்பி ( வயது 24) எனற வாலிபர் வசித்து வந்துள்ளார்.இவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டு ஈடுபடுவார். இது போல் கடந்த புதன் கிழமை அன்று வீவாலிபர் பணம் கேட்டு பெற்றோருடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்த தகராறு முற்றிய நிலையில் இரக்கம் இன்றி பெற்றோரை மகன் கொலை செய்துள்ளார்.
இந்த கொலையை மறைக்க ஒரு அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இவர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள 6 குடும்பத்தினரையும் கொல்ல திட்டமிட்டுள்ளார்.
பின்னர், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள 3 வயது குழந்தை முதல் 72 வயதுள்ள முதியவர் வரை 17 பேரை அடுத்தடுத்து கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் போலீசாருக்கு தெரியவர யங் குயிங்பியை கைது போலீசார் கைது செய்து உள்ளனர். எனினும், பெற்றோரையும், அருகில் குடியிருந்த 17 பேரையும் நபர் எப்படி கொலை செய்தார் என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை.