செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிரியா குண்டு வீச்சில் 96 குழந்தைகள் பலி | போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்சிரியா குண்டு வீச்சில் 96 குழந்தைகள் பலி | போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்

சிரியா குண்டு வீச்சில் 96 குழந்தைகள் பலி | போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்சிரியா குண்டு வீச்சில் 96 குழந்தைகள் பலி | போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்

1 minutes read

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறலுக்கு பிறகு சிரியாவில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 96 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக உளநாட்டு போர் நடக்கும் சிரியாவில் கடந்த மாதம்7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனவே, அரசு ராணுவமும் கிளர்ச்சியாளர்களும் போரிடாமல் அமைதி காத்தனர்.

ஆனால் கடந்த 19-ந் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள் வசம் நீண்ட நாட்களாக இந்த அலெப்போ பகுதியை மீட்க ராணுவம் திடீரென குண்டு வீச்சு நடத்தியது. அதற்கு ரஷியா ராணுவமும் உதவியது.

அங்கு குண்டு வீச்சு நடத்தப்பட்டது என்பதை விட குண்டு மழை பொழியப்பட்டது என்றே கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1900 குண்டுகள் வீசப்பட்டன.

இதனால் அலெப்போ மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின. குண்டு வீச்சுக்கு ஆஸ்பத்திரிகளும், மின் நிலையங்களும், குடிநீர் சப்ளை நிலையங்களும் தப்பவில்லை. இவை அனைத்தும் தரைமட்டமாயின.

இத்தாக்குதலில் அலெப்போ நகரில் மட்டும் 320 பேர் பலியாகினர். அவர்களில் 96 குழந்தைகள் அடங்குவர்.

இது தவிர அலெப்போ மாகாணத்தில் குண்டு வீச்சில் இடிந்து தரைமட்டமான வீடுகளில் இடிபாடுகளில் சுமார் 3 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் 1 லட்சம் பேர் குழந்தைகள் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

குண்டு வீச்சுக்கு ஆஸ்பத்திரிகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டதால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

கிளர்ச்சியாளர்கள் பகுதியில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அங்கு தற்போது 30 டாக்டர்களே உள்ளனர். அவர்கள் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற அளவில் தான் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.