அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிற டொனால்டு டிரம்ப் (வயது 70), தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அவர் கடந்த 2005–ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர், பெண்களிடம் தான் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது எதையும் ஒருவர் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் அவரது சொந்தக்கட்சியிலேயே கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. தலைவர்கள் பலரும் அவருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெற்றதுடன், போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய அமெரிக்கர்கள் பலரும் தங்களது ஆதரவை ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு தெரிவித்துள்ளனர்.
மிசோரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸ் நகரில் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் கலந்து கொண்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த விபத்தில் அதிபராகும் வாய்ப்பைப்பெற்றால், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைச் சிறையில் அடைப்பேன் என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட இணையக் காப்பகத்திலிருந்து மின்னஞ்ச்லகளை அனுப்பியதற்காக திருமதிலாரில்லரி மீது அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அதை விசாரிக்கத் தனிப்பட்ட வழக்குரைஞரையும் நியமிப்பேன் என்றார் டிரம்ப். தேசிய பாதுகாப்புக்குத் ஹிலாரி பங்கம் விளைவித்துவிட்ட்தாக அவர் சாடினார்.
தமது செயல்களுக்காக ஹிலாரி வெட்கப்படவேண்டும் என்றார் அவர்.
விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.