செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை; 140–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிப்பு | ஏமன்இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை; 140–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிப்பு | ஏமன்

இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை; 140–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிப்பு | ஏமன்இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை; 140–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிப்பு | ஏமன்

1 minutes read

ஏமன் நாட்டில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின்போது சவுதி கூட்டுப்படையினர் குண்டுமழை பொழிந்தனர். இதில் 140–க்கும் மேற்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். சவுதி கூட்டுப்படையின் இந்த தாக்குதல் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

ஏமன் நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

சவுதி கூட்டுப்படைகளின் தாக்குதலின்போது தொடர்ந்து அப்பாவி மக்களும் பலியாகி வருவதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 131 பேரும், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் 106 பேரும் கொன்று குவிக்கப்பட்டது, சர்வதேச அளவில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் சனாவில் சமூக நலக்கூடம் ஒன்றில், ஹவுதி அமைப்பினர் நடத்தி வருகிற அரசின் உள்துறை மந்திரியாக உள்ள கலால் அல் ராவிஷானின் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது சவுதி கூட்டுப்படையினர் அங்கு குண்டுமழை பொழிந்தனர். குண்டுகள் தொடர்ந்து விழுந்தபோது, அங்கிருந்தவர்கள் ஓலமிட்டனர். சவுதி கூட்டுப்படையினர் நடத்திய இந்த வான்தாக்குதலில் 140–க்கும் மேற்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 520–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.