செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடைஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடை

ஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடைஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடை

0 minutes read

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
ஆப்பிள் வாட்சுகள் மூலம் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக உலகம் முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் இணையதளத்தை ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்ததாகக் கடந்த வாரம் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல, உலகின் முன்னணி தடகள வீரர்கள் சிலரின் மருத்துவ அறிக்கைகளையும் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்து, இன்டர்நெட்டில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

 
இந்நிலையில் பிரிட்டன் பிரதமராக தெரேசா மே பதவியேற்ற பின், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கொண்டுவரத் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் ஆப்பிள் வாட்ச்சும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்க்கக்கூடும் என்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக டேவிட் கேமரூன் பிரிட்டன் பிரதமராக இருந்த போது அமைச்சரவைக் கூட்டங்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கொண்டுவரத் தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.