சீனா, அடுத்த ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து ஏவுகணை எதிர்ப்புப் பயிற்சியை நடத்துகிறது. இது போன்ற பயிற்சி கடந்த மே மாதமும் நடத்தப்பட்டது.
அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறையை தென்கொரியாவில் நிறுவுவதற்கான திட்டத்தை அமெரிக்காவும் தென்கொரியாவும் வெளியிட்டன. இதனால் சீனாவுக்கு ரஷ்யாவுக்கு கோபம் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து கூட்டுப் பயிற்சி குறித்த அறிவிப்பை நேற்று பீஜிங்கில் தொடங்கிய வருடாந்திர அனைத்துலக பாதுகாப்பு மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இதில் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளையும், அமைப்புகளையும், சேர்ந்த தற்காப்புத் துறை அதிகாரிகள் அதில் கலந்துகொள்கின்றனர்.
மூன்று நாள் மாநாட்டில் ஆசியாவின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆராயப்படும். இந்த ஆண்டு, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் பசிபிக் ஆகியவற்றைச் சேர்ந்த நாடுகள் கூடுதலாகப் பங்கேற்கின்றன.