செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வியத்நாமில் தொடர் கன மழை24 பேர் பலிவியத்நாமில் தொடர் கன மழை24 பேர் பலி

வியத்நாமில் தொடர் கன மழை24 பேர் பலிவியத்நாமில் தொடர் கன மழை24 பேர் பலி

1 minutes read

வியத்நாமில் தொடர் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 24 பேர் பலியாகினர். மேலும் நான்கு பேரை காணவில்லை.
இதுகுறித்து பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
குவாங் பின்க் மாகாணத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 90 செ.மீ. வரையில் கனமழை பெய்தது.
இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு 1.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. பயிர்கள், மீன் பண்ணைகள், அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்தன.
வடக்கு-தெற்கு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குவாங் பின்க் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்துக்கு 18 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மூன்று மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 6 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவரைக் காணவில்லை.
புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஏதுவாக, அதிக ஆபத்தான பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யுமாறு உள்ளூர் நிர்வாகத்தினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
தென் சீனக் கடலில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் மணி 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் வடக்கு வியத்நாமை நோக்கி நகர்ந்து வருவதாக அந்த நாட்டின் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.