செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகர் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகர் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது

ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகர் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகர் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது

1 minutes read

ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில், ஈராக்கின் பிரபல நகரமான மொசூல் உள்ளது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 360 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மொசூல் ஈராக்கின் 2–வது மிகப்பெரிய நகரம் ஆகும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியேறின. இதையடுத்து கடந்த 2014–ம் ஆண்டு பயங்கரவாதிகள் ஈராக் ராணுவத்தை விரட்டியடித்து விட்டு மொசூல் நகரைக் கைப்பற்றிக் கொண்டனர். மேலும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் அபு பக்கிர் அல்–பகாதி தன்னை இந்த பகுதியின் தலைமை நிர்வாகியாக அறிவித்துக் கொண்டார்.

15 லட்சம் மக்கள் வசிக்கும் பெரிய நகரம் மொசூல் ஆகும். அங்குள்ள மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த நகரை மீட்பதற்கு ஈராக் ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயங்கி வந்தது.

தற்போது ஈராக்கின் பல பகுதிகளில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு விட்டனர். மொசூல் மட்டுமே அவர்களின் பிடியில் உள்ளது. கடந்த சில மாதங்களாக மொசூல் நகரையொட்டிய பகுதிகளை கைப்பற்றி வந்த ஈராக் ராணுவம் தற்போது அந்த நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்து உள்ளது. சுமார் 3 லட்சம் வீரர்கள் ஆயுதங்களுடன் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.