செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 200 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு | சிரியாவில் துருக்கி வான் தாக்குதல் 200 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு | சிரியாவில் துருக்கி வான் தாக்குதல்

200 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு | சிரியாவில் துருக்கி வான் தாக்குதல் 200 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு | சிரியாவில் துருக்கி வான் தாக்குதல்

0 minutes read

சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி நாட்டின் எல்லையையொட்டி அமைந்து உள்ள பகுதிகளில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதிராக துருக்கி ராணுவம் கடந்த ஆகஸ்டு முதல் வான்தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் துருக்கி ராணுவம் சிரியாவில் குர்து இன போராளிகளின் நிலைகளை குறிவைத்து தொடர் வான் தாக்குதலை நடத்தியது.

இதுகுறித்து துருக்கி ராணுவம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ‘‘குர்து இன போராளிகளின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்தன. இதில் குர்து இன போராளிகளின் 9 கட்டிடங்கள், ஆயுதங்கள் பொருத்திய வாகனம் ஒன்று உள்ளிட்டவை முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்த தொடர் வான்தாக்குதலில் சுமார் 200 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்’’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.