செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் படுகொலைஇலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் படுகொலை

இலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் படுகொலைஇலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் படுகொலை

1 minutes read

யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள், அரசு அலுவலகங்களை முற்றுகை போராட்டம் நடத்தினர்.யாழில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் கொலை தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேனாவை தூக்கும் கைகளில் ஆயுதம் ஏந்த வைக்க வேண்டாம் என்ற முழக்த்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம் முன்பாக  மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் ஒன்று திரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “மறைமுக இன அழிப்பா?“ போன்ற பல்வேறு பதாகைகளை ஏந்தி படுகொலைக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

கடந்த கால யுத்தம் காரணமாக வறுமையின் மத்தியில் கல்வியை தொடர்ந்து இன்று பல்கலைக்கழகம் வரை செல்லும் தமிழ் மாணவர்கள் மீது இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.