செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பிரான்சில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பிரான்சில்

காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பிரான்சில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பிரான்சில்

1 minutes read

உலகிலேயே முதல் முறையாக, வீடுகளிலேயே சிறிய அளவில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பிரான்சில் துவக்கப்பட்டுள்ளது.

 

வீடுகள் மட்டுமின்றி பொது இடங்கள் உள்ளிட்டவைகளிலும் அதிக அளவில் இந்த காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. மரத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலை இயந்திரத்தில் சுழலும் தன்மை கொண்ட இலைகள் போன்ற அமைப்பு உள்ளது. இதன் சுழற்சியின் மூலம் சுமார் 3.1 கிலோவாட் வரை மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த காற்றாலை மரங்கள் சாலையோரங்கள், பூங்காக்கள் போன்றவற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

11 மீட்டர் உயரமும், 8 மீட்டர் சுற்றளவும் கொண்ட இந்த காற்றாலை மரம் பல கிளைகளை கொண்டுள்ளது. வெள்ளை நிறத்தில் இரும்பாலான இந்த மரத்தில் 72 இலை போன்ற மின்சாரம் தயாரிக்கும் விசைப்பொறிகள் உள்ளன. இவை சத்தமின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை லேசான காற்று வீசினாலே சுழன்று, மின்சாரத்தை தயாரிக்கும் வகையிலானதாகும். இந்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை, பொதுமக்கள் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு, செப்டம்பரில் நாடு முழுவதும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

 

ஒரு மர காற்றாலையில் இருந்து தயாரிக்கப்பட்டும் மின்சாரத்தை கொண்டு 50 வாட்ஸ் திறன் கொண்ட 15 தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த முடியும். 20 கிலோ வாட்ஸ் மின்சாரம் தேவைப்படும் 1000 சதுரடிக்கும் குறைவாக உள்ள அலுவலகத்திற்கும், 83 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கும், 71 பூங்கா விளக்குகளுக்கும், ஒரு எலக்ட்ரானிக் கார் ஒரு ஆண்டிற்கு 16,363 கி.மீ., பயணிப்பதற்கு பயன்படுத்த முடியும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.