ஜெருசலேமில், இயேசு உயிர்த்தெழுவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, நுாற்றாண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.மத்திய ஆசியாவில் உள்ள, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள், அங்குள்ள ஜெருசலேம் நகருக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. ஜெருசலேமின் பழைய நகரில், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் அமைந்துள்ளன. அவர் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுவதற்கு முன், அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அங்கு அமைந்துள்ளது.
புனித ஸ்தலமாக கருதப்படும் அங்கு, உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அந்த கல்லறையில், இயேசு கிறிஸ்துவின் உடல் கிடத்தி வைக்கப்பட்டதாக நம்பப்படும், கற்பலகை உள்ளது. இரு நுாற்றாண்டுகளுக்கு முன், ஏற்பட்ட தீ விபத்தின்போது, கல்லறையின் சில பகுதிகள் சேதமடைந்தன. இதனால், இயேசுவின் உடல் கிடத்தப்பட்டதாக கருதப்படும் கல், பாதுகாப்பு கருதி, மார்பிளால் மூடி மறைக்கப்பட்டது. எனவே, அங்கு வரும் யாத்திரீகர்கள், கல்லறையின் உட்பகுதிக்கு முழுமையாக சென்று பார்வையிட முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில், நுாற்றாண்டுகளுக்கு பின், அந்த கல்லறையை சீரமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இயேசுவின் உடல் கிடத்தப்பட்ட கல் மீது இருந்த, மார்பிள் அகற்றப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது; அந்த கல்லை அனைவரும் பார்வையிட்டு, செல்கின்றனர். அந்த கல் குறித்த ஆய்வு செய்ய, வரலாற்று ஆய்வாளர்களுக்கு, தற்போது வாய்ப்பு கிடைத்துஉள்ளது.
7