உலகின் மிக வெப்பமான பாலைவனம், உலகின் மிக நீளமான 3-வது பாலைவனம் ஆகிய பெருமைகளைக் கொண்டது ஆப்ரிக்காவின் சகாரா பாலைவனம். கிட்டத்தட்ட 9 மில்லியன் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பாலைவனம் வடக்கு ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சகாரா பாலைவனத்தை சேர்ந்த அல்ஜீரியா, அன்செப்ரா ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் சிவப்பு நிறத்தைக் கொண்ட சகாரா மணல் தற்போது பனிப்போர்வையுடன் பரந்து கிடக்கிறது. இதனை கரிம் பவுச்சட்டா என்னும் புகைப்படக்கலைஞர் மிக அழகாக படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.
கடைசியாக 1979-ம் ஆண்டு சகாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து சுமார் 37 வருடங்களுக்குப் பின் இந்த வருடத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சகாரா பாலைவனத்தில் மீண்டும் பசுமையான சூழல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.