உலகில் போர் பதற்றம் அதிகம் உள்ள பகுதிகளிலும், கலவரங்கள் அதிகம் நிகழக்குடிய பகுதிகளுக்கும் ஐ.நா. அமைதிப்படையினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த அமைதிப்படையில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒன்றாக இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு, அப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளிலும் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில், கலவரம் அதிக அளவில் நிகழக்குடிய சூடானின் தெற்கு பகுதிக்கு சமீபத்தில் ஒரு ஐ.நா. அமைதிப்படை கூழு அனுப்பப்பட்டது. அந்த குழுவில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்த குழுவின் தலைவராக பிரட்டன் நாட்டை சேர்ந்த பெண் லெப்டினன்ட் கர்னலான கேட்டி ஹிஸ்லோப் பொறுப்பேற்றுள்ளார். ஐ.நா. அமைதிப்படையின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.