மிக அதிவேகமாக பறந்து செல்லும் ‘ஹைபர் சோனிக்’ விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இதன் மூலம் பெய்ஜிங்கில் இருந்து நியூயார்க்குக்கு 2 மணி நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டுசேர்க்க முடியும்.
தற்போது பெய்ஜிங்- நியூயார்க் இடையே 13½ மணிநேரம் விமான பயணம் நடைபெறுகிறது. மிக அதிவேகமாக ‘ஹைபர் சோனிக்’ விமானம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
அண்மையில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது அது மணிக்கு 8,600 கி.மீ. வேக திறனுடன் சென்றது. இதில் பயணம் செய்பவர்க்கு விமானக் கட்டணம் உயர்வாக செலுத்த வேண்டி வரும் என கூறப்பட்டுள்ளது.