கடும் குளிர் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வருகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் சாலை போக்குவரத்து மற்றும் ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 21 பேர் போலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
