பல்வேறு கிளர்ச்சி குழுவினர் சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கட்டுப்பாட்டுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வைத்துள்ளனர்.
சிரியா ராணுவம் போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்குமிடங்களை அழிக்க ரஷிய நாட்டு படைகளின் துணையுடன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சிரியாவில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை ஒரு மாதத்துக்கு இடைக்கால போர்நிறுத்தம் செய்யும் சமரசத்தை ரஷியா உருவாக்கி தந்தது. இந்த போர்நிறுத்த நேரம் தவிர மற்ற வேளைகளில் இருதரப்பினரும் சரமாரியான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத் தாக்குதல்களினால் பல மக்கள் உயிரிழந்தனர்.
