இன்று இத்தாலி நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவை முழு பெரும்பான்மை பெற முடியாது என்று கூறப்படுகிறது.
315 இடங்களுக்கான தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. பின்னிரவு 11 மணிவரை நடைபெறும் இந்த தேர்தலில் 5 கோடியே 70 லட்சம் மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர்.
950 இருக்கைகளை கொண்ட இத்தாலி பாராளுமன்றத்தில் 5 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாகவும், 630 பேர் துணை உறுப்பினர்களாகவும் உள்ளனர். தற்போதைய அதிபர் சில்வியோ பெர்லுஸ்கோனி அளவுக்கு அதிகமாக அகதிகளை அனுமதித்ததால் நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து வருவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த தேர்தலில் அவரது தலைமையிலான கட்சி வெற்றி பெற முடியாது என்பதை கருத்துக் கணிப்புகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளன.
