செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தஞ்சக்கோரிக்கையாளர்களின் படகுகள் திருப்பி அனுப்பப்படும் | ஆஸ்திரேலிய அரசிற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்

தஞ்சக்கோரிக்கையாளர்களின் படகுகள் திருப்பி அனுப்பப்படும் | ஆஸ்திரேலிய அரசிற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்

1 minutes read

ஆஸ்திரேலியாவை அடைய முயற்சிக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் படகுகளைத் திருப்பி அனுப்பும் கொள்கையை மாற்றுவதில் தொழிலாளர் கட்சிக்கு எந்த ஆர்வமுமில்லை என ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்ட்டன் தெரிவித்துள்ளார். படகு விவகாரத்தில் எதிர்க்கட்சி எடுத்துள்ள இந்நிலைப்பாடு, ஆளும் அரசிற்கு நேரடியான ஆதரவு வழங்கக்கூடியது என அகதிகள் நல செயற்பாட்டாளர்கள் எண்ணுகின்றனர். 

அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் நடத்தப்படும் விதம் பற்றி தங்கள் கட்சி அக்கறைக் கொண்டுள்ளதாகவும் காலவரையின்றி தஞ்சக்கோரிக்கையாளர்களைத் தடுத்து வைத்திருப்பதால் படகுகளைத் தடுக்கலாம் என்னும் வழிமுறையை நாங்கள் நம்பவில்லை என்றும் பில் ஷார்ட்டன் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லையோர பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசாங்கம், ‘கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் 

நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம், அவர்களின் படகுகள் திருப்பி அனுப்பப்படும்’ எனத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது. அவ்வாறு பல படகுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன, அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  அத்துடன், 2013க்கு முன் வந்த சுமார் 2000 வெளிநாட்டு அகதிகள் இன்றுவரை மனுஸ் மற்றும் நவுரு தீவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Report by,

Migration Correspondent, Altamira World Wide

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.