Saturday, May 11, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மாவனல்லை ஸாஹிராவின் குவைத் கிளை அங்குரார்ப்பணம்

மாவனல்லை ஸாஹிராவின் குவைத் கிளை அங்குரார்ப்பணம்

1 minutes read

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான குவைத் கிளை கடந்த 29 மார்ச் குவைத்தில் உள்ள Continenral Hotel இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

குவைத் மண்ணில் இலங்கைப் பாடசாலைகளுக்கான முதலாவது OBA அமைப்பு ஸாஹிராவின் குவைத் கிளை என்பது இங்கு வரலாற்றுச் சாதனையாக பதிவு செய்யப்படுகின்றது.

இந்த நிகழ்வுக்கு விசேட அதிதியாக ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளரும் மற்றும் X-Zahirians ன சகோதரர் ரிஸ்மி ராசிக் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது குவைத் OBA யின் 13 நிர்வாக சபை உறுப்பினர்களும், ஆறு உப குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More