அந்த வகையில் குறித்த இயக்கத்திற்கு அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி  என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சவுதியை பிறப்பிடமாக கொண்ட இயக்கத்தின் பேச்சாளர் அபூ ஹசன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டதையும் ஐ எஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இயக்கத்தின் தலைமையை கொன்றமைக்காக சந்தோசப்படவேண்டாமென அமெரிக்காவை எச்சரித்துள்ள ஐ எஸ் பேச்சாளர் , மத்திய கிழக்குக்கு வெளியேயும் தமது தாக்குதல்கள் தொடருமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு தமது இயக்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பக்தாதியின் செப்டெம்பர் மாத இறுதி உரையை பின்தொடர்வார்களென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.