கொரோனாவால் பலியான புலம்பெயர் தமிழருக்கு ஈழத்தில் அஞ்சலி!

வவுனியாவில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (16) 1,154வது நாளில் தாமது போராட்டத் தளத்திற்கு சென்று, வெளிநாடுகளில் கொரோனாவினால் பலியான இலங்கை தமிழர்களுக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் தமது உறவுகளை தேடி தொடர்ந்தும் போராடி வருவதை இந்த அஞ்சலியுடன் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆசிரியர்