செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழ்நாட்டில் அதிக கல்லூரிகள் உருவாக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்!

தமிழ்நாட்டில் அதிக கல்லூரிகள் உருவாக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்!

1 minutes read

சென்னை: தமிழ்நாட்டில் அதிக கல்லூரிகள் உருவாக்கப்பட்டது திமு.க ஆட்சியில்தான் என்று லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டடத்தை இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். லீபா என்னும் பெயரிடப்பட்ட இந்தக் கட்டடமானது புதிய வடிமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவால் கட்டப்படுள்ளது.

இந்தக் கட்டட திறப்பு விழாவின்போது கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, எழிலன் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., சேவியர் பிரிட்டோ, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், கலாநிதி மாறன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் லயோலா கல்லூரியில் தான் படித்தனர். நான் மட்டும் தான் இங்கு படிக்கவில்லை; எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. லயோலா கல்லூரியில் பயின்ற மாணவர்கள் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர்.

அனைவரும் உயர்கல்வி கற்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ வேண்டும். தமிழ்நாட்டில் அதிக கல்லூரிகள் உருவாக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான். ஒருவரின் கல்வி அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும். காமராஜர் காலத்தில் பள்ளிகள் அதிகம் உருவாகின. தி.மு.க. உருவானதே கல்லூரிகளில் தான் என்று பேசியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.