புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அணு ஆயுதங்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரிப்பு

அணு ஆயுதங்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரிப்பு

0 minutes read

உலகளவில் மொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அச்சம் எழுந்துள்ளது.

கடந்தாண்டை விடவும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக Nuclear Weapons Ban Monitor எனும் அமைப்பு வெளியிட்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை உயர்வதற்கு ரஷ்யாவும் சீனாவும் பெரும் பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரேனியப் போரால் அணுவாயுதப் பதற்றம் அதிகரித்திருப்பதாகவும் உலகின் 9 இடங்களில் 9,575 அணுவாயுதக் கட்டமைப்புகள் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை பாய்ச்சுவதற்குத் தயார்நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றின் மொத்த சக்தியும் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்ட அணுக்குண்டின் ஆற்றலைவிட 135,000 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.