Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மணிப்பூர் மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு

மணிப்பூர் மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு

1 minutes read

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3ஆம் திகதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது.

இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி பாராளுமன்ற மக்களவையிலும், சுதந்திர தின விழா உரையின்போதும் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார்.

அங்கு அமைதி நிலவி வருவதாக தெரிவித்தார். அம்மாநில முதல்வரும் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை ஐந்து மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு இருந்து வந்தது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முற்றுகையிடும் திட்டத்தை COCOMI திரும்ப பெற வேண்டும் என அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆனால், COCOMI மீடியா ஒருங்கிணைப்பாளர், ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

ராணுவ தடுப்பால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். மே 3ஆம் திகதி ஏற்பட்ட வன்முறையின்போது, பலர் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More