செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வதேச விசாரணைக்கு மைத்திரியும் வலியுறுத்து!

சர்வதேச விசாரணைக்கு மைத்திரியும் வலியுறுத்து!

0 minutes read

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“சனல் 4 ஊடாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களை நூறு வீதம் ஏற்கவும் முடியாது. அதேபோல் நிராகரித்து விடவும் முடியாது. எனவே சனல் 4வில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில் இங்கு விசாரணையை ஒப்படைத்து சரிவராது. இங்கு இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் திருப்தியும் இல்லை.

சனல் – 4 வீடியோ குறித்து விசாரணை அவசியம் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஐ.நாவின் கோரிக்கையின் பிரகாரம் சர்வதேச விசாரணை நடத்துவதே சிறந்தது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.