September 22, 2023 6:00 am

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி- இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.

இதேபோல், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.

இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.

அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணி பந்து வீச உள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்