செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புப் படை!

‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புப் படை!

1 minutes read

புது டில்லியில் திட்டமிடப்பட்டிருந்த “கரப்பான்பூச்சி” (Cockroach) போராட்ட இயக்கத்தை ஒடுக்கும் விதமாக இந்திய பாதுகாப்புத் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

குறித்த இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த டில்லி முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீதிகள் பாதுகாப்புத் தடுப்புகள் மூலம் மூடப்பட்டு, போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த ஜந்தர் மந்தர் (Jantar Mantar) பகுதிக்குச் செல்லும் வழிகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கொக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் திப்கே மற்றும் இரண்டு தலைவர்கள் மும்பையிலிருந்து டில்லி சென்றடைந்தவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” என்று குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து மே மாதத்தில் இந்த இயக்கம் உருவானது.

தற்போது வேலையின்மை, வினாத்தாள் கசிவுகள் மற்றும் அரசுப் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன், தேர்தல் வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், உலோகத் தடுப்புகள், துப்பறியும் ட்ரோன்கள் மற்றும் மனிதச் சங்கிலிகளாக பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தைப் பதிவு செய்யச் சென்ற பல ஊடகவியலாளர்களும் தடுத்து வைக்கப்பட்டனர்; எனினும் ‘நியூஸ்லாண்ட்ரி’ (Newslaundry) ஊடகத்தைச் சேர்ந்த மூன்று பத்திரிகையாளர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை மாதம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது காவல்துறையினருடன் மோதல்கள் வெடித்ததுடன், அதனைத் தொடர்ந்து இந்தியாவின் கல்வி அமைச்சர் பதவியிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.