Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரபல ஜோதிடர் இந்திக்க கைது! – 20 வரை மறியல்

பிரபல ஜோதிடர் இந்திக்க கைது! – 20 வரை மறியல்

1 minutes read

மதக் கோட்பாடு மற்றும் நம்பிக்கைகளை அவமதித்த குற்றச்சாட்டில் பிரபல ஜோதிடர் இந்திக்க தொடவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி காணொளிகள் ஊடாக நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தினார் என்று அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 12 தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் ஜோதிடர் இந்திக்க தொடவத்த பொலிஸ்  கணினி குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் இன்று பிற்பகல் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, நீதிவானின் உத்தரவுக்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜோதிடர் இந்திக்க தொடவத்த, பிறப்பிலிருந்தே கண்பார்வையை இழந்தவராவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More