Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டக்வோர்த் லூயிஸ் முறையால் பாகிஸ்தான் வெற்றி ..!

டக்வோர்த் லூயிஸ் முறையால் பாகிஸ்தான் வெற்றி ..!

1 minutes read

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக டக்வோர்த் லூயிஸ் முறை முறையில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பை தொடரில் 35-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.

இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது.

பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

பாகிஸ்தான் அணி 21.3 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து இருந்தபோது பெங்களுருவில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

அப்போது களத்தில் ஃபகார் ஜமான் 106* ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 47* ரன்களுடனும் இருந்தனர்.

மழை நின்ற உடன் மீண்டும் போட்டி தொடங்கியது. பின்னர் DLS முறைப்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெற 41 ஓவர்களுக்கு 342 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் மீதம் உள்ள 19.3 ஓவருக்கு 182 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 26 -வது ஓவர் வீசும்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது.

அப்போது பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 1 விக்கெட் இழந்து 200 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் ஃபகார் ஜமான் 126* ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 66* ரன்களுடனும் இருந்தனர்.

பாகிஸ்தான் வெற்றி பெற 93 பந்தில் 142 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக என அறிவிக்கப்பட்டது.

புள்ளி பட்டியலில் இரு அணிகளும் 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும் அடுத்தடுத்து உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More