செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் புதியவர்கள் சம்பியனாகினர்

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் புதியவர்கள் சம்பியனாகினர்

1 minutes read

பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் களிமண் தரை டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நிறைவுபெற்ற  பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நிரல்படுத்தலில் 2ஆம் இடத்திலிருந்த ஜேர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்வும் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடுநிலையாளராக போட்டியிட்ட 19 வயதான இளம் வீராங்கனை மிரா அண்ட்றீவாவும் (ரஷ்யா) சம்பியன் பட்டங்களை சூடி வரலாறு படைத்தனர்.

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டி வரலாற்றில்  இந்த வருடம்   ஒற்றயைர் பிரிவுகளில் புதியவர்கள் இருவர் சம்பியனாகியமை விசேட அம்சமாகும்.

அது மட்டுமல்லாமல் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ், மிரா அண்ட்றீவா ஆகிய இருவரும் மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டி வரலாற்றில் சம்பியனானது இதுவே முதல் தடவையாகும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நிரல்படுத்தலில் 10ஆம் இடத்திலிருந்த இத்தாலி வீரர் ஃப்ளாவியோ கோபொலியை இறுதிப் போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் எதிர்த்தாடினார்.

ஐந்து செட்கள் நீடித்த மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 3 – 2 என்ற செட்கள் (6 – 1, 4 – 6, 6 – 4, 6 – 7, 6 – 1) வித்தியாசத்தில் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடினார்.

இதற்கு முன்னர் மகளிர் ஒற்றைய இறுதிப் போட்டியில் நிரல்படுத்தலில் 8ஆம் இடத்தில் இருந்த மிரா அண்ட்றீவா வெற்றிபெற்று சம்பியனானார்.

இறுதிப் போட்டியில் நிரல்படுத்தலில் இடம்பெறாத போலந்து வீராங்கனை மஜா ச்வாலின்ஸ்காவை எதிர்த்தாடிய மிரா அண்ட்றீனா 2 நேர் செட்களில் (6 – 3, 6 – 2) வெற்றிகொண்டு தனது முதலாவது மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.