Sunday, October 25, 2020

இதையும் படிங்க

நான் ஓர் உயிருள்ள பிணம் | ரமேஷ் பிரேதன் நேர்காணல்

உரையாடல் – சித்ரன், லஷ்மி சரவணக்குமார், முருகபூபதி, சபரிநாதன், சூர்யதேவ் லக்ஷ்மி சரவணகுமார்: அதீதனின் இதிகாசம் கிரணத்தில் வந்தபோது...

ஒற்றையாட்சி ஆரோக்கியமானதல்ல; ஞா.ஸ்ரீநேசன் நேர்காணல்

“கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போன்று இருக்கின்ற அதிகாரங்கள் போதாது என்று ஆயுத போராட்டம் நடந்து முடிந்தும், ஜனநாயக போராட்டம் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றபோது, இருக்கின்ற அதிகாரங்களை பறிக்கின்ற செயற்பாடுகள் காணப்படுகின்ற...

அம்பாறை மீது தமிழ் பிரதிநிதிகளுக்கு அக்கறை இல்லை | கலையரசன்

“நாட்டிலுள்ள இன ரீதியான அடக்குமுறையினால் கடந்த காலம் தொட்டு வடகிழக்கில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை...

இனி ஜெனீவா தீர்மானம் பலவீனப்படும் | முன்னாள் இராஜதந்திரி நேர்காணல்

“தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால்...

அடிப்படை உரிமையை கேட்டால்கூட அதை தமிழீழம் என்கிறார்கள்! ஜூனியர் விகடனுக்கு விக்கி பதில்

ஆகஸ்ட் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். இது குறித்து இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான விக்னேஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “நடைபெறவிருக்கும் தேர்தல்...

ஆசிரியர்

தம்பி பிரபாகரன் சொன்னதைப்போல மக்கள் விழிப்படைய வேண்டும்! விக்கி நேர்காணல்

விழிப்பு தான் விடுதலைக்கு முதல்படி என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும். இதுவரை காலமும் தம்பியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அவரை பிழையானவராகக் காட்டி அரசியல் செய்ய முயல்கின்றார்கள். காரணம் அவர்கள் சிங்களத் தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்ப்பார்க்கின்றார்கள். மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. இத்தகையவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற, சுயநிர்ணய ஆட்சியை வலுவாகக் கோருகின்ற எங்களுக்கு இந்தமுறை வாய்ப்பைத் தாருங்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் இடம்பெற்ற நேர்காணலை நன்றியுடன் மறுபிரசும் செய்கிறோம்…

ஒரு மாகாணத்தின் முதல்வராக இருந்த நீங்கள் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் போட்டியிடத் தேவைதானா?

பதில்; தேவை. மக்கள் சேவையை வழி நடத்த அதிகாரம் தேவையாக இருக்கின்றது. மக்கள் சேவை எனும் போது மக்களை ஒன்றிணைப்பது, அவர்களின் வாழ்வாதாரம் உள்ளடங்கலான அன்றாட பிரச்சனைகளைத் தீர்ப்பது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை உறுதிப்படுத்தல், சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் என்று பலவும் அதனுள் அடங்கும். முதல்வர் என்ற பதவியை அனுபவித்துவிட்டு, அதன் கௌரவங்களுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பும் ஒருவர் ஓய்வை நோக்கிச் செல்லலாம். ஆனால் முதல்வர் பதவிக்கு வந்த பின்னர், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நான் அங்கம் வகித்த கட்சியின் தலைமைத்துவத்தின் ஏமாற்றுதல்களையும் கண்ட பிறகு ஓய்வெடுப்பது சுயநலச் செயலாக நான் கருதினேன். எம் மக்களுக்கு கொள்கை ரீதியான ஒரு மாற்று அரசியல் பாதையை உருவாக்கிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால்தான் இந்தப் பயணம். எங்கள் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் பல ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வருகின்றார்கள். அவர்கள் சேவை மனப்பான்மையையும் மக்கள் நேய மனோபாவத்தையும் வெளிக் காட்ட வேண்டும். அவ்வாறான மனோபாவத்தை எம் கட்சியினரால் வெளிக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

 ஒருவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம் வகித்திருந்தால் அக் கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகவும் தாங்கள் இருந்திருக்க முடியுமல்லவா?

பதில்;  நான் எந்தக் காலத்திலும் அரசியலுக்கு வரவே விரும்பவில்லை. அதை பலமுறை கூறியிருக்கின்றேன். முதல்வராக வந்த தொடக்கத்தில் இருந்து பலமுறை கூறி வந்திருக்கின்றேன். ஆனால் வந்த பின் கண்டவை எனக்கு வியப்பை ஊட்டின. தொடர்ந்தும் கட்சியில் இருக்க வேண்டும், அதற்காகக் கட்சித் தலைவர்களுக்கு ஆமா போட வேண்டும். கட்சி மூலமாக தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளில் இருக்க வேண்டும், அதற்காக மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதைவிடுத்து கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற மனோ பாவத்திலேயே எமது பிரதிநிதிகள் இருக்கக் கண்டேன். கட்சித் தலைவர்களும் அதையே எதிர்பார்த்தார்கள். அவர்களைப் போல  பதவிகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் நான் அரசியலுக்கு வந்திருந்தால் தொடர்ந்தும் முதல்வராக இருக்க ஆசைப்பட்டிருப்பேன். நான் இப்போது தமிழ் மக்களின் எதிர்காலத்தை அச்சத்துடன் காண்கின்றேன். கொள்கை ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு வேகம் தான் என்னை இந்த மாற்றுத் தலைமைப் பயணத்திற்குள் கொண்டு வந்துள்ளது.

தனியாக அரசியல் பயணத்தை தொடங்கத்தான் வேண்டுமா?

பதில்;  இந்த நிர்பந்தத்தை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தான் உருவாக்கினார்கள். எனக்கு எதிராக ஒரு குற்றப் பிரேரணையை உருவாக்கி, அதை இலங்கை அரசின் பிரதிநிதியான அன்றைய ஆளுரிடம் கொண்டு சென்று கையளித்தார்கள். எந்த ஆளுநர் வேண்டாம் என்றார்களோ, அந்த ஆளுனரிடம் சென்று என்னை எதிர்ப்பதற்காக மண்டியிட்டார்கள். நான் மக்களுக்கு உண்மையாக இருந்து கொள்கையில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயற்பட விரும்பியமை அவர்களுக்கு சிக்கலாக இருந்தது. அப்படி சிக்கலானவர்களைவிட்டு நான் கொள்கைப் பற்றுடன் பயணிப்பதுதானே சிறந்தது? தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று ஒதுங்கியிருக்க என்னை என் மனம் விடவில்லை.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தங்கள் பிரதான விமர்சனம் என்ன?

பதில்;  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தை ஆதரித்தபோது, எம் மக்களின் பிரச்சினைகள் பலவற்றை தீர்த்திருக்கலாம். அந்தப் பொன்னான வாய்ப்பை அவர்கள் தவறவிட்டார்கள். அன்றைக்கு பௌத்தத்திற்கு முன்னுரிமையை ஆதரித்தார்கள். வடக்கு கிழக்கில் விகாரைகள் கட்டும் தீர்மானங்களையும் தமிழர்களுக்கு எதிரான பல திட்டங்களையும் ஆதரித்தார்கள். அவற்றின் விளைவுகள்தான் இன்றைக்கு தொல்லியல் ஆக்கிரமிப்புக்கள் எம் மண்ணில் பெருமளவில் நடக்க இடமளித்துள்ளன. அத்துடன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் இனப்படுகொலை சம்பந்தமான சர்வதேச விசாரணையை நடத்தவிடாமல் கால அவகாசத்தை வழங்கி, அதனை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் எமது பிரதிநிதிகள் நடந்து கொண்டமை ஏற்கத் தக்கன அல்ல.

தமிழ் தலைவர்கள் மக்களுக்கு என்ன கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்;  உண்மையும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும், கொள்கைப்பற்றும் தான் தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டிய பண்புகள். வேறு கடின விடயம் ஒன்றுமில்லை. நான் வடக்கில் மக்களுடன் மக்களாக வாழ்ந்த காலத்தில்தான் நிறைய விடயங்களை உணர்ந்தேன். எங்கள் மக்கள் நிறைய தியாகங்களைச் செய்தவர்கள். அவர்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. அவர்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது. உண்மையில் மக்களுடன் மக்களாக வாழ்வதும் அவர்களுக்கு நேர்மையாக இருப்பதுந்தான் தமிழ்த் தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டும். இராஜதந்திரம் என்ற பெயரில் எம் மக்களுக்குத் துரோகம் இழைக்கக்கூடாது. இன்று மக்களுக்கு இது நன்றாக விளங்குகின்றது. இனியும் அதை எங்கள் அரசியல்வாதிகள் செய்ய முடியாது.

வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியமையால் எதை சாதித்தீர்கள்?

பதில்; இதுவரை காலமும் இலங்கையில் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது இனப்படுகொலையே என்பதை இந்தத் தீவுக்குள் உள்ள சட்ட ரீதியான அல்லது ஜனநாயக ரீதியான சபை ஒன்றில் நிறைவேற்றியிருப்பதுதான் அதன் முக்கியத்துவம். தமிழ்நாட்டு சட்டமன்றத்திலும் வடக்கு மாகாண சபையிலுந்தான் இத்தகைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாறு முழுவதும் ஒரு ஆவணமாக மாத்திரமல்லாமல், ஆயுதமாகவும் இருக்க இந்தத் தீர்மானம் வழி வகுத்துள்ளது. அதுதான் இலங்கை அரசுக்கு எம்மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. துரதி;டவசமாக எமது பிரதிநிதிகள் எனப்படுவோருக்கும் அதனால்தான் என்மீது கோபம். இது மிகக் கவலையான விடயம். அவர்கள் தேர்தல் கூட்டங்களிலும் ஊடகங்களிலும் பேசிவந்த இனப்படுகொலை என்ற விடயத்தைத் தானே நாம் தீர்மானமாக நிறைவேற்றினோம். ஆனாலும் அதன் காரணமாக அவர்களுக்கு என்மீது ஏன் கோபம் வந்துள்ளது என்பது ஒரு புரியாத விடயமாக உள்ளது. ஒரு வேளை அவர்களின் சுயநலமே அவர்கள் என்னை வெறுக்கக் காரணமாக இருந்திருக்கக்கூடும். ஆகவே எமது சுயநல அரசியல்வாதிகளின் முகத் திரையைக் கிழிக்கவும் இந்தத் தீர்மானம் உதவி செய்துள்ளது.

மக்களிடம் என்ன கோரிக்கையை முன் வைக்கின்றீர்கள்?

பதில்; விழிப்பு தான் விடுதலைக்கு முதல்படி என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும். இதுவரை காலமும் தம்பியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அவரை பிழையானவராகக் காட்டி அரசியல் செய்ய முயல்கின்றார்கள். காரணம் அவர்கள் சிங்களத் தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்ப்பார்க்கின்றார்கள். மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. இத்தகையவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற, சுயநிர்ணய ஆட்சியை வலுவாகக் கோருகின்ற எங்களுக்கு இந்தமுறை வாய்ப்பைத் தாருங்கள் என்று கேட்கின்றேன். ஒரு புதிய அரசியல் சூழல் ஏற்படட்டும். இல்லாது போனால் எங்கள் புனிதங்களை அவமதிப்பவர்களுக்கும் எங்களை ஏமாற்றுபவர்களுக்கும் அங்கீகாரம் அளிப்பதுபோல ஆகும். அது எங்கள் மண்ணுக்கு நாங்களே இழைக்கும் துரோகம் ஆகிவிடும்.

உங்கள் பயணத்திற்கு மக்கள் எத்தகைய ஆதரவை வழங்குவார்கள் என நினைக்கின்றீர்கள்?

பதில்; தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது இளைஞர்களும் மக்களும் திரண்டு வீதிக்கு வந்தார்கள். வடக்கு கிழக்கு எங்குமிருந்து வந்து யாழ்ப்பாணக் கோவில்த் தெருவில் நின்று எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அந்த ஆதரவுக் குரல்தான் என் அரசியல் பயணத்தைத் தூண்டியது. எனக்கான கடமையை உணர்த்தியது. மக்கள் இம்முறை எங்களுக்கு அமோக ஆதரவைத் தருவார்கள். மக்கள் தரும் ஆதரவை அவர்களின் விடியலுக்காகக் கடுமையாகப் பயன்படுத்துவோம். சலுகை அரசியல், வியாபார அரசியல் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதுடன் எமது கொள்கையை வலியுறுத்தி ஒரு முன் மாதிரியான புதிய அரசியலைத் தொடங்குவோம்.

நேர்காணல் – வனஜன்

இதையும் படிங்க

அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு | அனந்தி

தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானவராக இருக்கும் சுமந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடும் அரசியல் தரப்புக்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தமிழினத்தின்...

தமிழ்த் தலைமைகளுக்குத் தேவை புதிய அணுகுமுறை | சுரேன் ராகவன்

• 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது • 20இல் உரிய திருத்தங்கள் செய்யப்படும் இனக்குழுமங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக...

13ஐ நீக்க முனைவதே முட்டாள் தனமானது | திஸ்ஸ விதாரண

13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையில் சிறந்த கட்டமைப்பாகவே உள்ள நிலையில் புதிய அரசியலமைப்பில் அதனை மேலும் வலுவானதாக மாற்றுவதற்கு பதிலாக, முழுமையாக நீக்க வேண்டும்...

பின்னடைவுக்கு ரணில் மட்டுமே பொறுப்பாளி அல்ல | ருவன் விஜேவர்த்தன நேர்காணல்

நாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காக, ஆட்சியில் உள்ள ராஜபக்ஷவினருக்கு எதிராக எதிரணிகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு தயாராக உள்ளோம். இந்த...

தமிழர்கள்தான் பூர்வீகக் குடிகள் | சிங்கள அறிஞர்களே அதற்கு சாட்சி | பேராசிரியர் புஸ்பரட்ணம்

தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் எனவும் தமிழ்மொழியே ஸ்ரீலங்காவின் தொன்மையான மொழியெனவும் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியரும், வரலாற்றுத்துறை, தொல்லியல்த்துறைத் தலைவரும், ஸ்ரீலங்காவின் மரபுரிமைச்...

ஆணவம் கொண்ட அரசு அழிவை நோக்கி செல்லும் | அரியநேத்திரன் நேர்காணல்

“தமிழ் தலைவர்களின் செயல்பாடுகளில் தடைகள், தாமதங்கள் இருப்பது என்பது உண்மைதான் இருந்தபோதும் தமிழ்தேசியம் தோற்கப்படவில்லை. அது வெற்றிக்கான படிகளை தாண்டுவதற்கு இன்னும் பல அர்ப்பணிப்புகளை...

தொடர்புச் செய்திகள்

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தொடர்பாக ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை இன்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 2015 ஆம்...

43 வருடங்களின் பின் இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்!

1977ஆம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாவது முறையாக குறைந்த வாக்கு பதிவினை நேற்றைய தேர்தல் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் முழுமையான வாக்குகள் 70...

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு

யாழ்மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக வாக்களிக்கும் பணியை நடாத்தி முடித்துள்ளதாகவும் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் வெளிவரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...

தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் சுட்டுக்கொலை

பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பதிவுகள்

தி.மு.க.வின் போராட்டம் ஓயாது | மு.க. ஸ்டாலின்

மருத்துவ கல்வியியல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு விரைந்து நடைமுறைப்படுத்தப்படும் வரை தி.மு.க.வின் போராட்டம் ஓயாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஈழத்தமிழர் வனுஷி வோல்டேர்ஸ்

ரிச்சர்ட் டி சொய்சா கொல்லப்படுவதற்கு முன்பே, ஐந்து வயதாக இருக்கும்போதே புலம்பெயர்ந்துவிட்ட வனுஷி,...

காலாவதியான லைசன்ஸ் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி!

2020 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான காலாவதி திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

இந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட் | உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான, உத்தேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம்...

புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா? | நிர்மலன்

கலைத்திட்டத்திலுள்ள  கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...

இந்தியப் பிரதமருடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள கூட்டமைப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமருடனான...

பிந்திய செய்திகள்

புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு...

மட்டக்களப்பில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

ஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு

ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு...

களுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு...

நாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

NB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், இ.போ.ச பேருந்தில் பயணித்து மறைந்திருந்த ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் ஒருவர், கொழும்பிலிருந்து பதுளை சென்ற...

துயர் பகிர்வு