Sunday, July 25, 2021

இதையும் படிங்க

மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழையால் 112 பேர் உயிரிழப்பு

இந்தியா, மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழை காரணமாக உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்குண்டு சனிக்கிழமை இரவு வரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார். ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள்...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது.

நான்கல்ல நாற்பது திருமணமும் செய்வேன்! – வனிதா அதிரடி

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா,...

இரவு தூக்கமும்.. காலை நேர சோர்வும்…

கணினி போன்ற மின்னணு சாதனங்கள் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

இந்தியா, இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஷிகர் தவான் தலைமையிலான...

ஆசிரியர்

இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல ‘கருத்து சுதந்திரம்’ | இயக்குனர் ரஞ்சித்

ஈழத்தின் நீர்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் ஜோசப் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழக திரைப்படங்களில் பணி புரிந்த இவர் சமீபத்தில் இயக்கியுள்ள சினம்கொள் திரைப்படம் உலக தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி மேன் 2 திரைப்படத்தை எதிர்த்து அமேசன் இணையத்தை விட்டு வெளியேறியதுடன் ஊடகங்கள் வாயிலாக அந்தப் படத்திற்கு எதிரான கருத்தையும் வெளியிட்டு வருகிறார். அவருடனான விசேட செவ்வி இதோ.

பேமிலி மேன் படத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்?

தமிழ் இனத்தின் விடுதலைக்காக போரடிய எமது விடுதலை அமைப்பையும், தமிழர்களையும் தவறாக காட்சிபடுத்தியும், பிழையான வரலாற்றை உருவாக்க்கியும் family man 2 என்னும் தொடர் அமேசான் பிறைம்மில் வெளிவந்திருக்கின்றது. கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல. வரலாற்றை பிழையாக மாற்றுவதல்ல. இத்தொடர் அரசியல் வன்மத்தோடும் தமிழ்இனக்குரேதத்தோடும் உருவாகியுள்ளது, ஒட்டுமொத்த தமிழ் சமூகமே இதை எதிர்க்க வேண்டும்

இதன் பின்னால் ஏதும் அரசியல் பின்னணி உண்டா?

இலப அரசியல் இல்லாமால் தமிழரின் பிரச்சனைகளை யாரும் அனுகுவதிமில்லை பேசுவதுமில்லை. 2009 பின் ஈழத்தமிழரையும், ஈழத்தமிழர் விடுதலைக்காய் போராடிய விடுதலைப் புலிகளையும் பிரித்து வைக்கும் அரசியல் தொடங்கிவிட்டது. அதற்க்கக எதிரிகள் முதலில் பயண்படுத்தியது ஈழத்தின் புலி எதிர்ப்பு படைப்பாளிகளைத்தான். எலும்புக்கு ஆசைப்பட்டு தன் இனத்துக்காக போராடிய மாவீரர்களை சமூக வலைத்தளங்களிலும், படைப்புகளிலும் பயங்கரவாதிகளாக, பாசிசவாதிகளாக முத்திரை குத்த முனைந்தார்கள். ஆனால் அவ்வகை ஈனஅரசியல் எடுபடாமால் போக, இன்றைய நவீன காலத்து OTT இயங்குதளங்களின் வழியாக உருவாக்கபடும் தொடர்களில் எமது ஈழ அரசியல் விடுதலை போராட்டம் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் அறம்சார்ந்த விடுதலை போராட்டத்தை, போராளிகளை பயங்கரவாதிகளாக முத்திரைகுத்தும் ஈன அரசியல் இங்கும் தொடர்கின்றது. சமூக வலைத்தளங்களைவிட இவ்வகை தளங்கள் ஆபத்தாணவை காரணம் ஒரே நேரத்தில் பல கோடி மக்களை சென்றடையக்கூடியவை, அதிகமான இளம் தலைமுரையினரை வாடிக்கையாளர்களாக கொண்டவை. நேர்மையான, ஒழுக்க கட்டுப்பாடோடு இயங்கிய ஒரு இயக்கத்தை பிழையானவர்களாக, அரசியலுக்காய் கொலை செய்பவர்களாக, சித்திகரிக்கும் இத்தொடர்கள் அடுத்ததலைமுறைக்கு பிழையான கருத்தை கொண்டு சேர்க்கின்றது. எமது நீயாத்தை பேசும் படைப்புக்கள் கோப்புக்கள் அழிக்கப்பட்ட சூழலில் இத்தகைய படைப்புக்களை நம்பி அதையே உண்மை என போககூடிய சூழல் உருவாகும். இதைத்தான் எமக்கு எதிரானவர்கள் உருவாக்க நினைப்பது இதுதான் இதற்க்கு பின்னால் இருக்க கூடிய அரசியல். 

எதிர்ப்பை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்?

பெரும் நிறுவனங்கள் வருவாய் இழப்பை மட்டுமே வைத்து பேரம் பேசக்கூடியவர்கள். இனக்கருத்துக்கோ நியாதர்மத்துக்கோ மதிப்பழிக்கமாட்டார்கள். அவர்கள் மொழி இலபம். அந்த இலபத்தை அசைத்து பார்ப்பதன் மூலமே நாம் வெற்றியடைய முடியும். ஈழம், தமிழகத்துக்கு வெளியே 10 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனார், இவர்களில் குறைந்தது 2 மில்லியன் மக்கள் அமேசான் பிறைம்மில் இருந்து வெளியேறினால்? Family man 2 போன்று இன்னும் எமக்கொதிரான குப்பை படைப்புகள் உருவாகமால் இருக்க இந்த வெளியேற்றத்தை ஒரு எச்சரிக்கையாகவும் இலபத்தை மட்டுமே பார்ப்பவர்களுக்கு பாடமாகவும் இது மாறும்.

தமிழகத்தில் இந்த படத்துக்கான எதிர்ப்பு எப்படி இருக்கிறது?

மிகப்பெரிய அளவில் இல்லை என்றே சொல்லவேண்டும், கோரோனோ காரணமாக மக்கள் முடங்கிகிடப்பதும் முக்கியமான காரணம், ஆனாலும் எதிர்ப்பை நாம் உருவாக்க முனையவேண்டும், ஈழத்தமிழரையும் மட்டுமல்ல, ஓட்டுமொத்த தமிழ் இனத்தையே தவறானவர்களாக இத்தொடர் வெளிப்படுத்தி நிற்க்கின்றது. தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையில் இருக்கும் தொப்புள்கொடி உறவை அழிக்க காலகாலமாக உருவாக்கப்படும் அரசியல் இதில் இலைமறை காயகவும் சில இடங்களில் வெளிபடையாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பெண் போராளியை அவளது சூழலை பயன்ப்படுத்தி தங்களது காம இச்சைக்கு இணங்க வைக்க தமிழகத்து தமிழர்கள் முயல்வதாக வரும் காட்சியின் மூலம் பெண்கள் மதிக்கும் ஒரு இனத்தை, அதுவும் போராளிகளை மதிக்கும் தமிழக உறவுகளை அசிங்கப்படுத்தி அதன் மூலம் ஈழத்தமிழர்களை தமிழாகத்துக்கு எதிரானவர்களாக மாற்றும் சூழ்ச்சி அரசியல் இடம்பொற்றுருக்கின்றது. ஆகவே தமிழக ஆளுமைகள் அரசியல்வாதிகள், சமூக ஆர்வளர்கள் இனைந்து மூர்க்க்கமாக இத்தொடர் நிறுத்தப்பட போராடவேண்டும். இந்தியாவில் பெரும் சந்தைய விரித்துள்ள அமேசான் நிறுவனத்துக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும்.

இந்திய தமிழக சினிமாவில் ஈழத் தமிழர்கள் பங்கு என்ன?

தாயரிப்பாளர்கள் என்கின்ற நிலையில் அன்மைகாலமாக நமது நிறுவனங்கள் இயங்க்கிகொண்டிருந்தாலும், அவர்களை இல்லாமால் செய்ய உள்குத்து வேலைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. கலைஞர்கள் பலர் செயற்ப்பட்டுக்கொண்டிருந்தாலும் வாய்ப்பு என்பது பெரிய அளவில் கிடைப்பதில்லை என்பதே உண்மை. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலை மாறியிருக்கின்றது அதற்க்கு காரணம் தமிழ் சினிமாவின் வியபாரம் புலம்பொயர் தமிழர்களில் தங்கியிருப்பதும் வெற்றி தேல்விக்கான இடத்தை நிர்னயிக்ககூடிய வருவாய் சூழல் அவர்கள் சார்ந்து இருப்பதும் காரணமாக இருக்கலாம்

ஈழ இயக்குனர்களுக்கு இந்திய சினிமாவில் உள்ள வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?

பாலுமகேந்திர, இன்னும் ஒரு சிலரை தவிர தமிழாக சினிமாவில் வாய்ப்புக்கள் கிடைக்காதவர்களே அதிகம். இன்றைய சூழலில் பலர் துனை இயக்குனர்களாக இந்திய சினிமாவில் செயற்ப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள், இவர்கள் எல்லோருக்கும் நாளைக்கு இயக்குனராக வாய்ப்பு கிடைக்குமா என்றால் அதற்க்கு காலம்த்தான் பதில் சொல்ல வேண்டும். ஈழம்சார்ந்த தயாரிப்பாளர்கள் வாய்ப்புகொடுத்தால் நடக்கலாம் ஆனால் தமிழக தயாரிப்பு நிறுவணங்கள் வாய்ப்பு தருவார்களா என்றால் அதற்க்கும் விடைகிடையாது, பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கதை சொன்னவன் என்ற அடிப்படையில் இதை சொல்கின்றேன். கதை பிடித்துப்போனாலும் வேறு எதோ காரணங்களுக்காக விஜய் சேதுபதியுடன், விசாலுடன் எனது தமிழக சினிமா முயற்ச்சிகள் இடையிலே நின்றுபோனது. ஆகவே நாம் சினிமாவை கற்றுக்கொண்டு எமது ஈழ சினிமாவில் செயற்பட முயலவேண்டும் 25 – 30 வீதமான வியாபாரம் எம்மிடம் இருக்கும்போது, சிறப்பான ஈழத்திரைப்படங்களும் வெற்றியடையும்.

பேமிலி மேன் போன்ற சதிகளை முறியடிக்கும் படைப்புகளுக்கான வாய்ப்பு உள்ளதா?

“படைப்பை படைப்பால் மட்டுமே அடிக்க முடியும்” அதற்க்கான பயணம் தொடங்கிவிட்டது. தனிமனிதனக தொடங்கிய போராட்டம் முப்படைகளும் கொண்ட பலம்மிக்க இராணுவாமாக மாற்றிகாட்டியவர் எமது தேசியத்தலைவர். அவர் வார்த்தையிலிருந்தே , அவர் பயணத்திலிருந்தே ஈழத்தமிழராகிய நாம் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும் அனுதபத்தை தேடவோ, இரந்து போய் மண்டியிடவோ அவர்கள் எமக்காய் போராடவில்லை. நாம் வல்லமை மிக்கவர்களாக போராட கத்துகொடுத்திருக்கின்றார்கள் விரைவில் சதிகளை முறியடிப்போம் அதற்க்கு நமது தாயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். கதைகள் எம்மிடம் கொட்டிக்கிடக்கின்றது கலைஞர்கள் இருக்கின்றார்கள் இது சாதியமாகும்.

இதையும் படிங்க

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை!

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம்...

கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும்...

ஆப்கான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘த கபிட்டல் மகாராஜா’ குழுமம் தலைவர் கொரோனா தொற்றால் காலமானார்

'த கபிட்டல் மகாராஜா' குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று காலமானார். கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக...

சர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது

பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புச் செய்திகள்

அயர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்,...

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை!

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம்...

ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்…!

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார். ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள்...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது.

நான்கல்ல நாற்பது திருமணமும் செய்வேன்! – வனிதா அதிரடி

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா,...

மேலும் பதிவுகள்

சிங்கப்பூரில் 13 வயது பாடசாலை மாணவன் கோடாரியால் வெட்டி கொலை

சிங்கப்பூரில் பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் சக மாணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டை அதிர வைத்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்…. நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

நடிகர் விஜய்யின் மேல்முறையீடு மனு விரைவில் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்...

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி

நடிகர் அஜித்தை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஷாலினி, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் கொரோனா தொற்று வேகமெடுத்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுகூடியுள்ள மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள்...

முதலிரவு ஆய்வுகளும்.. ருசிகரமான உண்மைகளும்..

பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக...

3 தலைமுறை பாவங்கள் நீங்க செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரம்

செய்த பாவங்கள் நீங்க முன்னேற்றத் தடையை அகற்ற, எதிர்மறை ஆற்றலை எதிர்த்துப் போராட யட்சினி வழிபாடு நமக்கு கை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

அயர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்,...

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை!

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம்...

ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்…!

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க...

செட்டி நாட்டு அவியல்!

தேவையானவை:கத்தரிக்காய் - 100 கிராம்,உருளைக்கிழங்கு - 2,வெங்காயம்,தக்காளி - தலா 1,பட்டை - சிறிய துண்டு,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவைக்கு. அரைக்க:தேங்காய்த்துருவல் -...

கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும்...

துயர் பகிர்வு