சூப்பர் ஓவரில் தில்லி வெற்றி

சூப்பர் ஓவரில் தில்லி வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்டத்தின்போது பஞ்சாப் அணி 2-வது பேட்டிங் பிடித்ததால், சூப்பர் ஓவரில் அந்த அணி முதல் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

சூப்பர் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், பூரனும் களமிறங்கினர். தில்லி அணிக்கு ரபாடா பந்துவீசினார்.

முதல் பந்தில் 2 ஓட்டங்கள் கிடைக்க, 2-வது பந்தை பவுன்சராக வீசினார். அதை தூக்கி அடிக்க முயன்ற ராகுல் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3-வது துடுப்பாட்ட வீரராக மேக்ஸ்வெல் களமிறங்கினார். ஆனால், ஸ்டிரைக்கில் இருந்த பூரன் 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், பஞ்சாப் அணி 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, தில்லியின் வெற்றிக்கு 3 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

தில்லி அணிக்கு ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். முதல் பந்தில் பந்த் ஓட்டம் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த பந்தை ஷமி வைடாக வீச வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது. அடுத்த பந்தில் பந்த் 2 ஓட்டங்கள் எடுக்க தில்லி அணி எளிதாக வெற்றி பெற்றது.

ஆசிரியர்