Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு T20போட்டியை முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்து!

T20போட்டியை முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்து!

1 minutes read

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3 -0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மலான் 76 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமீர 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனை அடுத்து பதிலுக்கு ஆடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக பினுர பெர்ணான்டோ 20 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக டேவிட் மலானும் தொடர் ஆட்டநாயகனாக சேம் கரனும் தெரிவு செய்யப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More