Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அஜாஸ் படேல் சாதனை

ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அஜாஸ் படேல் சாதனை

1 minutes read

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி வீரர் அஜாஸ் படேல் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Image

இடது கை சூழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் (வயது 33) நேற்றைய இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த சாதனையை புரிந்தார்.

47.5 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அவர் 119 ஓட்டங்களை வழங்கி 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களான ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த படியாக பட்டியலில் இடம் பிடித்தார்.

ஜிம் லேக்கர் 1956 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 53 ஓட்டங்களை வழங்கி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அது போல அனில் கும்ப்ளே 1999 இல் பாகிஸ்தானுக்கு எதிராக 74 ஓட்டங்களை வழங்கி இந்த சாதனையை படைத்திருந்தார்.

Story Image

அஜாஸ் படேல் சளைக்காமல் 47.5 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை எடுத்தது, இந்தியாவை முதல் இன்னிங்சில் 325 ஓட்டங்களுக்குள் கட்டுப்பட செய்தது.

ஆனால் நியூஸிலாந்து பதில் தாக்குதலை தொடங்கிய போது அவர்களால் சோபிக்க முடியவில்லை. அதன்படி முதல் இன்னிங்ஸில் அவர்கள் வெறும் 28.1 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்குள் சுருண்டனர்.

இதனால் 332 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 101 ஓட்டங்களை குவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More