செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐசிசி மகளிர் வளர்ந்துவரும் நாடுகள் கிரிக்கெட் | அயர்லாதை வீழ்த்தி சம்பியனானது இலங்கை

ஐசிசி மகளிர் வளர்ந்துவரும் நாடுகள் கிரிக்கெட் | அயர்லாதை வீழ்த்தி சம்பியனானது இலங்கை

1 minutes read

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அம்ஜான் நகரில் நடைபெற்றுவந்த ஐசிசி மகளிர் வளர்ந்துவரும் நாடுகள் ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி சம்பியனானது.

தீவுகள் ஆராயுங்கள்

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

சத்யா சந்தீப்பனி அபாரமாக பந்துவீசி இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றது.

அயர்லாந்து துடுப்பாட்டத்தில் அலனா டல்ஸெல் (24), லூயி லிட்ல் (15), ஜோர்ஜியா டெம்ப்சி (13), அமி ஹன்டர் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சத்யா சந்தீப்பனி 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அயர்லாந்தனால் நிர்ணயிக்கப்பட்ட 97 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 12.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சஞ்சனா காவிந்தி (25), இமேஷா துலானி (44 ஆ.இ.), கவிஷா டில்ஹாரி (16 ஆ.இ.) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

பந்துவீச்சில் கியா மெக்காட்னி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் காரா மறே 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சத்தியா சந்தீப்பனி, தொடர்நாயகி: விஷ்மி குணரட்ன (324 ஓட்டங்கள்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.