செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பிக் பேஷ்: ஹோபார்ட் ஹரிகேன் அணி சிறப்பான வெற்றி!

பிக் பேஷ்: ஹோபார்ட் ஹரிகேன் அணி சிறப்பான வெற்றி!

1 minutes read

பிக் பேஷ் ரி-20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில், ஹோபார்ட் ஹரிகேன் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஹோபார்ட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஹோபார்ட் ஹரிகேன் அணியும் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹோபார்ட் ஹரிகேன் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் மெக்டர்மோட் 67 ஓட்டங்களையும் மத்தியூ வேட் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், ஆந்ரே ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளையும் குல்டர் நைல் 2 விக்கெட்டுகளையும் புரோடி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 181 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 156 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், ஹோபார்ட் ஹரிகேன் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ கிளார்க் 52 ஓட்டங்களையும் ஹில்டன் கார்ட்ரைட் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹோபார்ட் ஹரிகேன் அணியின் பந்துவீச்சில், ரிலே மெரிடித் மற்றும் தோமஸ் ரொஞர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் நாதன் எலிஸ் 2 விக்கெட்டுகளையும் ஆர்ஸி ஷோர்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் எலிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.