செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 272-3!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 272-3!

1 minutes read

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் அஜிங்கியா ரஹானே 40 ஓட்டங்களுடனும் கே.எல். ராகுல் 122 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

சென்சூரியனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில், மாயங் அகர்வால் 60 ஓட்டங்களுடனும் செடீஸ்வர் புஜாரா ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் விராட் கோஹ்லி 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் லுங்கி ங்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்தியா அணி இன்று தொடரவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.