
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தம் 19 வயதுக்குட்பட்ட 2021 இளையோர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று காலை 11 மணிக்கு டுபாய் சர்வதேக கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை பாகிஸ்தனை 22 ஓட்டங்களினால் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அதேபோல் ஷார்ஜாவில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா பங்களாதேஷை 103 ஓட்டங்களினால் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தமையும் குறிப்பிடத்தக்கது.