செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: முக்கிய சில முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: முக்கிய சில முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

1 minutes read

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.

கடினத்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் சில போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வும், சுவிஸ்லாந்தின் ஹென்றி லக்சோனெனும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-1, 6-4, 7-6 என்ற நேர் செட் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இப்போட்டியில் கிரிகோர் டிமிட்ரோவ், 6-4, 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு அடியெடுத்து வைத்தார்.

இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப்பும், போலந்தின் மாக்டலேனா ஃப்ரிச்சும் மோதினர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், சிமோனா ஹெலப் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் கர்பீன் முகுருசா, பிரான்ஸின் கிளாரா புரல்லை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் கர்பீன் முகுருசா, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.