0
அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியின் பந்துவீச்சு மூலோபாய பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தத் தொடர் இடம்பெறவுள்ளது.