இந்தியாவுடனான டி:20 தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்தார் ஹசரங்க

இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இந்தியாவுக்கு எதிரான டி:20 தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளார்.

Image

அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஹசரங்க, இன்னும் அதிலிருந்து குணமடையாத காரணத்தினால் அவர் இந்தியாவுடானா மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளார்.

கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்ட நிலையில் முன்னதாக ஹசரங்க அவுஸ்திரேலியாவுடனான இறுதி மூன்று டி:20 போட்டிகளிலும் விளையாடவில்லை.

 அவரது 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த போதிலும், அண்மையில் அவருக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனையும் வைரஸ் தொற்றுக்கு சாதகமான முடிவனை வெளிப்படுத்தியுள்ளது.

இதனால் அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியே முடியாத நிலைமையில் உள்ளார். அதன் காரணமாக நாளை தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான டி:20 தொடரில் அவரால் பங்கேற்க முடியாது.

தேசிய அணியின் நம்பர் வன் சுழற்பந்து வீச்சாளராக வனிந்து ஹசரங்க இருப்பதால், இது இலங்கை அணிக்கு பெரும் இழப்பாகும்.

ஆசிரியர்