செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முன்னாள் உலக சம்பியன் இலங்கையை வீழ்த்திய நமிபியா

முன்னாள் உலக சம்பியன் இலங்கையை வீழ்த்திய நமிபியா

1 minutes read

மெல்பர்ன் ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற 8 ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் இலங்கையை 55 ஓட்டங்களால் நமிபியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது.

இந்த வெற்றி மூலம் மிகவும் கடுமையான முதலாவது தடையை நமிபியா இலகுவாக கடந்து இருபது 20 உலகக் கிண்ணத்தில் தனது நம்பிக்கையை அதிகரித்துக்கொண்டது.

அதேவேளை, இந்தத் தோல்வியினால் இலங்கை பெரும் அழுத்தத்தையும் நெருக்கடியையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இருபது உலகக் கிண்ண முதலாம் சுற்றில் (தகுதிகாண்) இலங்கையும் நமிபியாவும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன.

இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் இலங்கையை விஞ்சும் வகையில் நமிபியா விளையாடி முழு கிரிக்கெட் உலகையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 164 ஓட்டங்கள் என்ற ஓரளவு கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று 55 ஓட்டங்களால் மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நமிபியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைக் குவித்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.