Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ரௌத்ரம் குறும்படம் ஜேசு ஞானராஜ்

ரௌத்ரம் குறும்படம் ஜேசு ஞானராஜ்

8 minutes read

“உங்கள தப்பு நடக்கிற இடத்துக்கு வந்து சண்டை போட சொல்லல! தப்பு நடக்காம தட்டி கேளுங்கனு தான் சொல்றேன்”

பொது இடத்துல நடக்கிற பிரச்சினையை கண்டு, நமக்கெதுக்கு வம்புனு ஒதுங்கி போறவங்களுக்கு சாட்டையடி கொடுக்க வந்திருக்கும் குறும் படம் தான் இந்த “ரௌத்ரம்”. அடுத்தவன்தான அடிபட்டு கிடக்கிறான், நமக்கென்ன! என்று ஒவ்வருவரும் நினைத்தால், நாளை நமக்கு பிரச்சினை வரும் போது யாரும் உதவ வரமாடார்கள் என்ற நல்ல கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் சமுதாய சீர்திருத்தத்தின்  முதல் ஏணிப்படியை இக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.அவர்களுக்குப்  பாராட்டுகள்!

வெளிநாடு செல்ல விருப்பமில்லாமல், கிராமத்தில் உள்ள தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்கிறார் கதாநாயகன். உரம் வாங்க நண்பன் அழைக்க,  டூவீலரில் இருவரும் உரக்கடைக்கு செல்கிறார்கள். அப்போது ரோட்டில் ஒரு அசம்பாவிதத்தை காண நேரிடுகிறது. அதைப் பார்த்த ஹீரோ அடுத்து என்ன செய்கிறார் என்பதை சமுதாய சிந்தனையோடு அழகாக சொல்லியிருக்கிறார்கள்.  

வயதான அப்பா குளிப்பதற்காக, அடிபம்பில் தண்ணீர் எடுத்து வெதுப்பி, பதமான விளாவும்  அன்பான மகனாக சாந்தமாக அறிமுகமாகிறார் கதையின் ஹீரோ. அப்படியானால் படத்தின் இறுதி காட்சியில் ஆக்ரோஷமாய் பொங்குவாரே என்கிறீர்களா!. ஆம், உண்மை தான். சாந்தம், ரௌத்ரம் இரண்டிலும் ஹீரோ முகேஷ் லிங்க் நூறுக்கு நூறு மார்க் வாங்கியிருக்கிறார். சபாஷ்!  “வெளிநாட்டுக்கு போய் அடுத்தவன்கிட்ட கை கட்டி நின்னு வேலை பார்க்கிறதை விட, சொந்த ஊரில் நம் மண்ணில் விவசாயம் பண்ணிக்கிட்டு குடும்பத்தோட இருக்கிறது எவ்வளவோ மேல்” என்று அவர் சொல்லும் போது பிழைப்புக்காக குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் கஷ்டப்படும் ஒவ்வொருவரின் எண்ண ஓட்டத்தையும் படத்தில் பார்க்க முடிகிறது.

“விவசாயத்துக்காக போராடுவோம், விவசாயத்தை காப்போம்னு சொல்றவங்க, விவசாயம் பண்றவனை கல்யாணம் கட்டிக்க முன் வரமாட்டேங்குறாங்க”  என்ற எதிர்வீட்டுக்கார தருமரின் வார்த்தைகள், இன்றைய இளைய தலைமுறையின் ‘சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று’ என்ற இரட்டை நிலைப்பாட்டுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி.

வாய்க்காலில் தண்ணீர் ஓடும்போது நம் மனமும் அதனோடே ஓடுகிறது. தோட்டத்தின்  பசுமையையும் தண்ணீரின் குளிர்ச்சியையும் கேமெரா நன்றாகவே படம் பிடித்திருக்கிறது. வயல்வெளி, வாழைத்தோட்டம்,  தென்னை மரங்கள் என்று சிவசுப்பிரமணியபுரத்தை கண்களுக்கு குளிர்ச்சியாக நன்றாக காட்டியிருக்கிறார்கள் ஒளிப்பதிவு செய்த ரீலிங்ஸ், பாலபிரகாஷ் மற்றும் ராகேஷ். அந்த வகையில் முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்துவிட்டனர். ஒரு சோறு பதமாக இங்கே ஒரு காட்சி! கதாநாயகனின் தந்தை, தெருவிருந்து வீட்டுக்குள் நுழைந்து மீண்டும் வீட்டின் பின்பக்கம் உள்ள புழக்கடைக்கு வருகிறார். இந்த காட்சியில், வெளிச்சத்திலிருந்து இருட்டு- மெல்லிய வெளிச்சம் – மீண்டும் பிரகாசமான சூரிய ஒளி என்று கேமராவில் சாகசம் செய்திருக்கின்றனர். அவர்களோடு இணைந்து பணியாற்றிய டிசைனர் செல்வபிரகாஷ் மற்றும் கோ-எடிட்டர் சுரேஷுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.

வயல் அறுவடையில் ஒலிக்கும் பின்னணி இசையும் அதனூடே வரும் பறவைகள் ஒலியும் இன்னமும் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது.கதாநாயகனின் நண்பனாக வரும் ‘பங்காளி’  படத்தின் இறுதியில் “நீங்களெல்லாம் மனுஷங்களா?” என்று கேட்கும் போது நமக்கும் சுரீரென்கிறது.

விவசாயம் செய்யும் தன் மகனுக்குப் பெண் கிடைக்காமல் போக, ” நீயும் வெளிநாட்டுக்கு வேலைக்கு போறியா?” என்று தன் ஆதங்கத்தை மகனிடம் சொல்லும் போது, வயதான விவசாயியின் ஆற்றாமையை பிரதிபலிக்கிறார் அப்பாவாக நடித்த ராசபழம்.

“குடிகாரப்பயலே! நான் வருவேண்டா ” சிறுவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கதையின் உயிர் நாடி, இறுதியில் குடிகாரனாக வருபவர் தான். அம்மன் ஆலயத்தின் முன்  வயதான பெரியவரை அடித்து கீழே தள்ள, அதே இடத்தில் சிறுவன் கையால் அடிவாங்குவது – இப்போதெல்லாம் தெய்வம் இம்மீடியேட் ஆக்ஷன் தான் என்று உணர வைக்கிறது.

நடிப்பு, திரைக்கதை, எடிட்டிங், இயக்கம் என்று நான்கு துறைகளில் புகுந்து விளையாடியிருக்கிறார் கதாநாயகனாக நடித்திருக்கும் முகேஷ் லிங்க். தன தந்தையிடம் பேசும் போது பொறுமையின் சிகரம் என்றால் தீமை கண்டு பொங்கும் போது சுனாமி பேரலை. வெளுத்துக்கட்டியிருக்கிறார். முக பாவனையும் குரலும் அதற்கேற்றாற்போல் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. கிளைமாக்ஸில்  இவர்  பேசும் ஒவ்வொரு டயலாக்கும்  சிந்திக்க வைக்கிறது. பாரதியாரின் தலைப்பு என்பதாலோ என்னவோ, கதாநாயகன் முகேஷ் லிங்கும் இளமை கால பாரதியைப் போன்றே தாடி மீசையுடன் வருகிறார். கோபமும் நன்றாகவே வருகிறது. கலையுலக கதவு ஒரு சிறந்த நடிகரை வரவேற்கத் தயாராகிவிட்டது.

பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை அந்தாதி செய்யுளில் உள்ள அகவலை கிளைமாக்ஸில் உபயோகித்திருப்பது இயக்குனர் முகேஷ் லிங்க்கிற்கு சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையை காட்டுகிறது. மொத்தத்தில் இந்த குழுவினரின் கன்னி முயற்சி பிரமிக்கவைக்கிறது.

வாழ்த்துக்களுடன்,
ஜேசு ஞானராஜ் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More