Saturday, September 25, 2021

இதையும் படிங்க

1985: இலங்கையில் இந்தியா | யூட் பிரகாஷ்

Sep 11….அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். Sep 11, 1985ல்...

கொரோனாவைவிடவும் கொடூரமாக உருமாறும் கூட்டமைப்பு: சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

கொரோனாவைிடவும் கொடூரமாக உருமாறி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் இனவழிப்புக்கான நீதிக்கான...

கொவிட்டுக்குப் பின்னரான பாடசாலைக்கல்வி எதிர் கொண்டுவரும் சவால்கள் | இராமச்சந்திரன் நிர்மலன்

அண்மைய காலங்களில் கொவிட் பெரும் தொற்று காரணமாக வேலை இழப்பு பொருளாதாரச்சரிவு சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்...

மிச்சேல் பச்லற் அம்மையாரே! கிரிசாந்தி, இசைப்பிரியாக்களுக்கான நீதியை தருவீர்களா? | தீபச்செல்வன்

பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகள் ஒரு சமூகத்தின் வேரைத்தான் பாதிக்கின்றது. தாய்மொழியையும் பண்பாட்டையும் மனித சமூகத்திற்கு பரிமாற்றம் செய்கின்ற மகத்துவமான பெண்கள் ஒரு இனத்தின்...

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

பின்னேரம் புகைக்கூட்டடியில ஆணியில தொங்கிக்கொண்டிருந்த சுளகை எடுத்து அதில ஒட்டியிருந்த காய்ஞ்சு போன பழைய மாவை தட்டி சுரண்டிப்போட்டு , சாடையா...

ஸ்ரீலங்காவை பாதுகாக்க ஐ.நாவில் புலிகளை பலியிட வேண்டாம்!: அவதானிப்பு மையம்

கூட்டமைப்புக்கு அவதானிப்பு மையம் கடும் கண்டனம்! ஸ்ரீலங்கா அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் உன்னத...

ஆசிரியர்

அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா? | கவிஞர் தீபச்செல்வன்

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது.

அரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் தனமான ஆட்சிகள் நிகழ்ந்த காலங்களில், ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், அரசியலமைப்பு பற்றி அறிஞர்கள் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினர். மக்களுக்கான ஆட்சி மக்களுக்காக அமைய வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் சமூக அரசியல் அறத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு பற்றிய அறிஞர்களின் பங்களிப்பு அமைந்தது.

ஆனாலும் அதிகாரத்தில் உள்ளவர்களால் எழுதப்படுகின்ற  அரசியல் சட்டம், சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு உரிமைகளை மறுக்கின்ற நிலையும் காணப்பட்டிருக்கின்றது. இலங்கையின் அரசியலமைப்பு அனுபவம் அப்படித்தான் இருக்கின்றது. உலகில் மிக நீண்ட அரசியலமைப்பு எனப்படும் இந்திய அரசியலமைப்பு, தாழ்த்தப்பட்டவர்களும் பெண்களுக்குமான இடங்களை சமூக நீதி நோக்கில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பாகுபாடு நிறைந்த உலகில் அரசியலமைப்பு சட்டம் வாயிலாக மனித உரிமைகளை வலுப்படுத்துவது அவசியமானது.

அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகப் பேசியிருந்தார். ஆனாலும் இந்த தீவில் தமிழர்களுக்கு ஒரு சட்டமும் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறையில் இருப்பதனால், ஜனாதிபதியின் இந்தப் பேச்சு, ஈழத் தமிழ் மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. மாறாக  இது தமிழர்களின் உரிமைகளை ஒழித்துக் கட்டுகிற திட்டமா என்ற அச்சத்தையே விதைத்திருக்கிறது என்பதே உண்மை நிலவரமாகும்.

இலங்கையில் 1978இல் புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டமும் ஆகும். செப்டம்பர் 2010 வரை இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது. கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன  மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 19 ஆவது அரசியல் திருத்தம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு சிறிதளவில் பகிர்ந்தளித்தமை மற்றும் ஆணைக்குழுக்களை உருவாக்கியமை இதன் விசேட அம்சங்கள் எனச் சொல்லப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலின் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி கோத்தபாய தரப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கப் போவதாக கூறி வருகின்றது. குறிப்பாக 19 ஆவது அரசியல் திருத்தத்தை அகற்றுகின்ற விதமாக இந்த திருத்தம் அமையும் என்பதை ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். அத்துடன் இராணுவத் தன்மையான ஆட்சி இயல்புகளை கொண்டுள்ள  கோத்தபாய அவர்களின் இந்த திருத்த முயற்சிகள், குறிப்பாக சிறுபான்மை மக்களை பாதிக்கும் வகையில் அமையும் என்பதும் அம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பௌத்தத்திற்கு முன்னுரிமை போன்ற காலம் காலமான இயல்புகளை இப்போதே ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரே நீதி, ஒரே சட்டம்  என்பது குறைந்த பட்சம், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளின் உரிமைகளைக் கூட பறித்துவிடுமா என்ற அச்சம் தமிழ் பேசும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உண்மையில் இலங்கைக்கு முற்றிலும் புதுமையான ஒரு அரசியல் திருத்தமே தேவைப்படுகின்றது. நவீன காலத்திற்கு ஏற்பவும், இனங்களை சமத்துவமாகவும் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட ஈழத் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் புதிய அரசியல் சட்டம் அமைய வேண்டியது கால அவசியமாகும்.

கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம், புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு மக்களின் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். கடந்த காலத்தில் இத்தகைய கருத்து கணிப்புக்கள் இடம்பெற்ற சமயத்தில், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் மாநிலத்தில் சுயாட்சியை வழங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியதும் கவனிக்க வேண்டியது. இந்த வேண்டுகோளை உள்ளடக்க தவறிய இலங்கை அரசின் புதிய அரசியலமைப்பு என்பது மிகவும் பழமையான ஒரு அரசியலமைப்பாகவே உருவாகும்.

இலங்கைக்கு முற்றிலும் புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்று தேவை என அரசு கருதினால், தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் என்று கருதினால் புதிய அரசியலமைப்பு அதனை தெளிவாகவும் உறுதியாகவும் தீர்க்கும் விதிகளை கொண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து வெறுமனே அரசியலமைப்பு திருத்தத்தினால் மாத்திரம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை உருவாக்க முடியாது. கடந்த கால தேர்தல்கள் வாயிலாக இத் தீவில் தமிழர்களும் சிங்களவர்களும் தத்தமது தேசங்களை தெளிவாக வரைந்தே வருகின்றனர். தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை தேர்தல்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை அழித்து விடுவதனால் இந்த நாட்டை ஒரு நாடாக்க முடியாது என்ற உண்மையைப் போலவே, சிங்கள பௌத்த பேரினவாத கருத்துருவாக்கம் கொண்ட அரசியலமைப்பாலும் இந்த நாட்டை ஒரு நாடாக்க முடியாது. தென்னிலங்கை மக்களின் இறைமைக்கு அளிக்கப்படும் மதிப்பு போலவே வடக்கு கிழக்கு மக்களின் இறைமைக்கும் அளிக்கப்பட வேண்டும். இந்த யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் அரசியலமைப்பு என்பது வெறும் சொற்களினாலும் பெயரினாலுமே ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்றாகும். இராணுவத்தால், ஆயுதங்களால், அரசியலமைப்பால் இனவாத அரசியல் பேச்சுக்களினால் இந்த நாட்டை ஒரு நாடாக்க முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்ட சூழலில், உண்மையிலேயே வடக்கு கிழக்கு மாநிலம் என்பது அரசியலமைப்பும் ஆட்சித் தலைவனும் இல்லாத ஒரு மாநிலமாகவே இருக்கின்றது. இலங்கை அரசின் யாப்பும் அதன் ஆட்சி பீடமும் இந்த மாநிலத்தை பிரதிபலிக்கவும் இல்லை, உள்ளடக்கமும் இல்லை என்பதே உண்மை. வெறுமனே இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட ஒரு நிலமாக இருக்கின்றதே தவிர, இலங்கை அரசின் ஆட்சியில் இருக்கவில்லை. ஆக்கிரமிப்பை உணரக்கூடிய மக்கள் தம்மை ஆளுவதை உணர முடியாது. ஒரு இனக்கூட்டத்தை நிராகரித்து, அழித்து ஒடுக்குகின்ற ஒரு அரசியலமைப்பு, அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொண்டதல்ல என்பதுதான் வெளிப்படை அர்த்தம்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை அநீதியினாலும் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட சுய உரிமைகளினாலும் இந்த தீவு இரண்டுபட்டே இருக்கின்றன. உண்மையில் கடலால் சூழப்பட்ட இந்த தீவின் நிலப்பரப்பு என்பது பன்னெடுங்காலமாக இரண்டுபட்டே இருக்கின்றது. இதனை ஒன்றிணைக்கும் புள்ளியாக இருக்கக்கூடிய அரசியலமைப்பு என்பது, தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக மாத்திரமே இருக்க முடியும். அதனை மறுத்து, சிங்கள பௌத்த பேரினவாத கருத்துவருக்காத்தின் அரசியலமைப்பை தோற்றுவித்தால், இத் தீவு அரசியலமைப்பு யாப்பின் வெற்றுச் சொற்களினால் மாத்திரம் ஒரு நடாக சொல்லப்படலாம்.  நிலத்தால் தெளிவாக பிரிவுக் கோடுகள் வரையப்பட்ட இரண்டு நாடுகளாகவே இருக்கும்.

கவிஞர் தீபச்செல்வன்

நன்றி – தமிழ்க்குரல்

இதையும் படிங்க

கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா

'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...

தியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்

அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...

ஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? | நிலாந்தன்

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம்...

சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர் | செல்லத்துரை சுதர்சன்

அஞ்சலிக் குறிப்பு நள்ளிரவில் முருகபூதி அண்ணரின் திடீர் அஞ்சல் செய்தி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ‘சேவியர் அங்கிள்’ என்று...

தொடர்புச் செய்திகள்

மிச்சேல் பச்லற் அம்மையாரே! கிரிசாந்தி, இசைப்பிரியாக்களுக்கான நீதியை தருவீர்களா? | தீபச்செல்வன்

பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகள் ஒரு சமூகத்தின் வேரைத்தான் பாதிக்கின்றது. தாய்மொழியையும் பண்பாட்டையும் மனித சமூகத்திற்கு பரிமாற்றம் செய்கின்ற மகத்துவமான பெண்கள் ஒரு இனத்தின்...

தென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்

எழுதியவர் :வெற்றி துஷ்யந்தன் இயக்குனர் ரஞ்சித் யோசப்பின் இயக்கத்தில் வெளியான திரைப்படம்...

நூல்களை ஆராத்திக்கும் ஆர்வலனுக்கு அமுதவிழா | கவிஞர் தீபச்செல்வன்

இலக்கிய உலகில் பெயர் என்பது ஒரு அடையாளம். சொந்தப் பெயராகவோ புனைபெயராகவே இருக்கலாம். எழுத்து வழியாக ஒரு எழுத்தாளன் முகவரியைத் தேடுகிறான். தன்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...

தமிழ்நாட்டில் காவல்துறை அதிரடி | 48 மணி நேரத்தில் 560 ரவுடிகள் கைது!

தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.

மும்பையை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் பதிவுகள்

நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட மைதானங்கள்

ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் பல...

திடீரென மாணவிக்கு ஏற்பட்ட சுகயீனம் | ஒரு மணித்தியாலத்தில் மரணம்

அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் திடீர் சுகயீனமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்து ஒரு மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவிக்கு...

நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும்...

நீங்கள் சானிடைசரை அடிக்கடி பயன்படுத்துபவரா?

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்திய மருத்துவ நடைமுறைகளில், அடிக்கடி கைகளை சானிடைசர் மூலம் சுத்தப்படுத்திக் கொள்ள...

அரபிக்கடலோரம் அற்புத சிவாலயம்

இந்தக் கோவிலுக்கு, 20 நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து மிகப்பெரிய சிவன் சிலையையும், கடற்கரை அழகையும்...

பிரபல தனியார் வங்கியின் பதவி உயர்வில் வடக்கு கிழக்கு உத்தியோகத்தர்கள் புறக்கணிப்பு!

பிரபல தனியார் வங்கியின் நிறைவேற்று அதிகாரி தரம் 1இல் பதவி உயர்வு வழங்கப்படாமல் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!

உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

வாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..!

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

அண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...

துயர் பகிர்வு