Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை புலிகளின் நிறத்தை நினைத்தே அஞ்சுபவர்களுக்கு ஏன் போர்வெற்றி விழா?

புலிகளின் நிறத்தை நினைத்தே அஞ்சுபவர்களுக்கு ஏன் போர்வெற்றி விழா?

3 minutes read

அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறத்தை நினைத்தே அஞ்சுபவர்கள், விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாக ஆண்டு தோறும் போர் வெற்றி விழாவை ஏன் கொண்டாட வேண்டும் என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை,

உள்ளுராட்சிமன்றங்களை திருகும் இராணுவமயம்

“யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை ஸ்ரீலங்கா அரசின் பேரினவாத ஆட்சிக்கும் பாசிவாத போக்கிற்கும் நல்ல எடுத்துக்காட்டாகும். மக்களால் வாக்களிக்கப்பட்டு, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட ஒரு சபையின் தலைமை பிரதிநிதியை கைது செய்வதற்கு என்பது மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு மாறாக செயற்படுகின்ற அராஜகம் ஆகும்.

அத்துடன் ஸ்ரீலங்காவில், குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா அரசும் ஸ்ரீலங்கா இராணுவமும் கடுமையாக ஒடுக்கி வருவதையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளது. கிராம மட்டத்தில், அல்லது உள்ளுர் மட்டத்தில் சின்னச் சின்ன நிகழ்வுகளைகச்கூட முன்னெடுக்க ஸ்ரீலங்கா அரச பேரினவாதமும் இராணுவப் பயங்கரவாதமும் அனுமதிப்பதில்லை என்ற கொடூர யார்த்தம் இங்கே வெளிப்பட்டு நிற்கின்றது.

இது தமிழ் இனத்திற்கு எதிரானது

மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு எதிரான அரு அராஜகமாக இதனை குறுக்கி பார்க்க முடியாது. அத்துடன் அரசியல் வேறுபாடுகள், விமர்சனங்கள் கடந்து இந்த அராஜகத்திற்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியமானது. அத்துடன் மாநகர காவல் படையின் நிறத்தை கண்டு அஞ்சியமையின் விளைவாகே மணிவண்ணனின் கைது இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் எதனை செய்தாலும் அதனை எதிர்க்கின்ற, அடக்குகின்ற சிங்களப் பேரினவாத்தின் போக்கை இனியும் ஈழத் தமிழ் மக்கள் சகித்துக்கொள்ள முடியாது. நீல நிறத்தில் காவல் படைகளை அமைத்து, நகரத்தை தூய்மைப் படுத்தும் செயற்பாடு உலக நாடுகளிலும் ஸ்ரீலங்கா தலை நகரிலும் உள்ள விடயம் என்ற போது ஏன், தமிழர்களின் மண்ணில் மாத்திரம் அது குற்றமாக்கப்படுகிறது என்பதை கடுமையான எதிர்ப்புடன் கேள்வி எழுப்பி நிற்கின்றோம்.

புலிகளுக்கு இன்னும் அச்சமா?

புலிகள் என்ற பெயரைக் கேட்டாலே இன்னமும் சிங்கள தேச ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். அத்துடன் எந்த நிறத்தைப் பார்த்தாலும் எந்த வடிவத்தைப் பார்த்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவே சிங்களப் பேரினவாதிகளுக்கு ஏற்படுகின்றது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் போய் போல இருக்கும் என்ற முதுமொழி சிங்களப் பேரினவாதிகள் விடயத்தில் நன்கு பொருந்துகின்றது.

எனினும் விடுதலைப் புலிகளின் காவல்துறைப் படையின் நிறத்திற்கே அஞ்சுகின்ற ஸ்ரீலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக ஏன் ஆண்டு தோறும் வெற்றி விழா கொண்டாடுகின்றது? எதற்கெடுத்தாலும் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார்தட்டுகின்ற இன்றைய ஆட்சியாளர் கோத்தபாய ராஜபக்ச, ஏன் விடுதலைப் புலிகளின் நிறத்திற்கும் நினைவுகளுக்கும் அஞ்சுகிறார்?

சுமந்திரனும் காரண கர்த்தா

தமிழர் தாயகத்தில், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் எனக் கூறப்பட்டு இதுபோன்ற அராஜகங்களை சிங்கள அரசும் அதன் இராணுவமும் தொடர்வதுடன் தமிழ் இளைஞர் யுவதிகளை காரணமின்றி கைது செய்வதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமான காரண கர்த்தா என்பதையும் தற்போது எவரும் மறந்துவிடக் கூடாது என்பதையும் இங்கே நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

ஏனனெனில் கடந்த காலத்தில், விடுதலைப் புலிகள் தனக்கு தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறி சிங்கள இராணுவப் பாதுகாப்பை பெற்றதுடன் தமிழ் இளைஞர்களை சிறையில் அடைக்கக் காரணமாக சுமந்திரன் இருந்துள்ளார்.

தற்போது மணிவண்ணணை மீட்கும் போராளியாக வேடமிடும் சுமந்திரனின் இத்தகைய செயல்களும் இன்றும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் என்றும் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் என்ற பெயரில் மாநகர காவல்படை மீதான தடை செய்யக் காரணமா இருந்துள்ளதுடன் மணிவண்ணனை கைது செய்யவும் அதுவே பின்னணியாகவு இருந்துள்மையினையும் நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழருக்கு நிறைவான அதிகாரம் தேவை

அத்துடன் சாதாரணமாக குப்பை அள்ளுகின்ற, வீதிகளில் எச்சில் துப்புவதை தடுத்து தூய்மை பேணுகின்ற உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை கூட தமிழ் மக்கள் மெற்கொள்ள அதிகாரம் இல்லை என சிங்கள தேசம் மேற்கொண்டுள்ள இந்த அடக்குமுறை, தமிழர் தேசத்தில் நிறைந்த சுயாட்சி தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேசத்தின் பார்வையை ஈர்த்துள்ள இந்த விடயம் குறித்து, அனை்தது தமிழ் தலைமைகளும் ஒற்றுமையுடன் எடுத்துரைப்பதுடன் தமிழர்களின் தன்னாட்சி கட்டமைப்பு நோக்கிய அரசில் தீர்வை வெல்லுகின்ற போராட்டத்தை மக்களின் எழுச்சியுடன் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் இனியேனும் உணர வேண்டும் என்பதையும் அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்தி நிற்கிறது…” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More