2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
கிளிநொச்சி நகரில் இயங்கிய அரசாங்க அதிபர் பணிமனை தர்மபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பொது மைதானத்திக்கு மாற்றப்பட்டது. புரட்டாதி 20 ந் திகதி அளவில் இயங்கத்தொடங்கிய அரசாங்க அதிபர் பணிமனை பல சிரமங்களுக்கு மத்தியில் பொது மக்களுக்கான உணவு விநியோகத்தை செய்ய வேண்டி இருந்தது.
முல்லைத்தீவு நகரில் இயங்கிய அரசாங்க அதிபர் பணிமனை புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தது லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களுக்கு இரு அரசாங்க அதிபர் பணிமனைகளுக்கும் வவுனியா பகுதியில் இருந்து எடுத்து வருகின்ற உணவு பொருட்களை விநியோகம் செய்வது பிரதான கடமையாக காணப்பட்டது.
இதே வேளை இரணைமடுகுளம், அக்கராயன் குளம் போன்ற பல்வேறு நீர்பாசன குளங்களின் கீழ் நெற்பயிர் செய்கை செய்யப்பட்ட வயல்கள் அரைவாசியும் கைவிடப்பட்ட நிலையில் மக்கள் இடம்பெயர்ந்து தர்மபுரம் பகுதிக்கு மீள குடியேறினர். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்களிடம் இருந்த உணவுப்பொருட்களை குறிப்பாக அரிசி நெல் என்பனவற்றை எடுத்து வந்திருந்தனர்
தை மாதம் அளவில் முங்கிலாறு நோக்கி இடம்பெயர்ந்த தற்காலிக கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனை பின்னர் உடையார்கட்டு பகுதிக்கும் இறுதியாக மாசி மாதம் அளவில் மாத்தளன் பகுதிக்கு சென்றடைந்தது.
தை மாதத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் வவுனியாவை சென்றடைய முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் திரு. பார்த்தீபன் அவர்கள் இரண்டு அரசாங்க அதிபர் பணிமனைகளினதும் சேவைகளை ஒன்றிணைத்து மக்களுக்கான உணவு விநியோகத்தினை மிகவும் சிரமத்தின் மத்தியில் செய்து வந்தார்.
போரினாலும் வேறு பல காரணங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் துயரமன வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அதே சமயம் அப்பகுதியில் பாஸ் நடைமுறை நெடுங்காலமாக அமுலில் இருந்தமையால் அப்பகுதியில் இருந்து வவுனியா பகுதிக்கு மக்கள் விரும்பினாலும் செல்ல முடியவில்லை. ஆரம்பத்தில் குடும்பத்தில் ஒருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. பிற்காலத்தில் பலவந்தமாகவும் இணைக்கப்பட்டனர். ,இதனால் பலர் கடுமையான மனநிலை பாதிகப்பட்டவர்களாக காணப்பட்டனர். குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மறைத்து வைத்திருக்க முயற்சித்தனர் இதன் பொது சில சமயங்களில் விபரீதமான விளைவுகளும் ஏற்ப்பட செய்தது.
இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் தர்மபுரம் வைத்தியாலைக்கு இறந்த ஒருவரின் சடலம் கொண்டுவரப்பட்டது. பெற்றோர்களும் உறவினர்களும் கூகுரல் எழுப்பி அழுத வண்ணம் இருந்தனர். பலவந்தமாக இணைக்க முயற்ச்சிக்கும் போது ஆனையிறவு தடடுவன்கொட்டியை அண்டிய பிரதேசத்தில் மறைந்திருந்த வேளையில் ஏற்ப்பட்ட கைகலப்பின் பினனர் தவறுதலாக சுடப்பட்டதாக கூறப்பட்டது.
எதாவது விபரீதங்கள் ஏற்படும் போது இறுதியாக வைத்தியாலைக்கு வந்தடையும் இவ்வாறன சம்பவங்கள் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பதட்டத்தியும் மனச்சோர்வையும் ஏற்ப்படுத்தியது.
இவ்வாறு போரின் பதட்டம் தொடர்ந்து கொண்டிருக்கையில் சில பெற்றோர் தங்களது பிள்ளைகளை போரில் இருந்தும் இவ்வாறான நெருக்கடியில் இருந்தும் எவ்வாறு பாதுகாப்பது என்று புரியாமல் சில சமயம் கதி கலங்கி இருப்பதை காணக்கூடியதாக இருந்தது இவ்வாறு மனநிலை பதிக்கப்பட்ட ஒரு பகுதியினருக்கு வைத்தியாலை பகுதியில் மனநல சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தது.
தொடரும் …………………………..
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/