Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் தமிழுக்கு முதலிடம்

இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் தமிழுக்கு முதலிடம்

4 minutes read

இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் தமிழுக்கு முதலிடம். – 2018-2019 போட்டி முடிவில் தமிழில் 2959 / பஞ்சாபியில் 1768 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.. இதற்குப் பிறகுதான் வங்காளி / உருது / சந்தாலி / இந்தி ஆகிய மொழிகள் வருகின்றன. இன்னும் தமிழர்கள் விக்கிபீடியாவில் நிறைய எழுதி பங்களித்தால் தமிழர்களின் இலவச அறிவுப் பகிர்தல் உச்சநிலை அடையும். விக்கிபீடியாவில் பங்களிப்பது எப்படி என்று படிப்படியாகச் சொல்லித்தரும் ஒரு பதிவினை செய்யுங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.ப்ளீஸ்.

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது : செப்.30, 2003 || Wikipedia was  launched in Tamil

இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் தமிழுக்கு முதலிடம். – 2018-2019 போட்டி முடிவில் தமிழில் 2959 / பஞ்சாபியில் 1768 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.. இதற்குப் பிறகுதான் வங்காளி / உருது / சந்தாலி / இந்தி ஆகிய மொழிகள் வருகின்றன. இன்னும் தமிழர்கள் விக்கிபீடியாவில் நிறைய எழுதி பங்களித்தால் தமிழர்களின் இலவச அறிவுப் பகிர்தல் உச்சநிலை அடையும். விக்கிபீடியாவில் பங்களிப்பது எப்படி என்று படிப்படியாகச் சொல்லித்தரும் ஒரு பதிவினை செய்யுங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.ப்ளீஸ்.

விக்கிபீடியாவில் குறுங்கட்டுரையாக்கம் செய்வது எப்படி?

தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன.

ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்கள் எழுதுவதாகும். விக்கி இடை இணைப்புகள், விக்கி உள் இணைப்புகள், வெளி இணைப்புகள், படங்கள் ஆகியவை இணைத்து குறுங்கட்டுரையை மேம்படுத்தலாம். விக்கி இடை இணைப்பு என்பது தமிழ் விக்கி தலைப்புக்கும் பிற மொழி தலைப்புகளுக்கும் இடது பக்கத்தில் தரப்படும் இணைப்பு ஆகும். இந்த இணைப்பு ஊடாக பிற பயனர் ஆங்கில விக்கிகோ பிற மொழி விக்கிகளுக்கோ சென்று மேலும் தகவல்களைப் பெற்று கட்டுரையை விரிபுபடுத்தலாம்.

விக்கி உள் இணைப்பு என்பது தமிழ் விக்கியிலேயே இருக்கும் கட்டுரைகளுக்கு இணைப்பு தருதல் ஆகும். இது சொல்ல வந்த தலைபில் இருந்து விலகாமல், ஆனால் பயனர்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்படக்கூடிய தலைப்புகளுக்கு இணைப்பு தருவதாகும். இதுவே கலைச்சொற்களை இணைத்து தமிழில் அறிவியல் தொழில்நுட்ப கருத்துப்புலத்தை கட்டமைக்கு உதவுகின்றது.

வெளி இணைப்புகள் இணையத்தில் தலைப்பு தொடர்பாக இருக்கும் கட்டுரைகளுக்கான இணைப்புகள். சிறப்பாக தமிழ் கட்டுரைகளை தேடி இணைத்தால் பயனர்களுக்கு பயன் மிகும். தகுந்த ஒளிப்படம், விளக்கப்படம் ஆகியவற்றை இணைத்தால் கட்டுரைப் படிக்க ஆர்வத்தை தூண்டும். ஒலி, நிகழ்பட கோப்புக்களும் இருந்தால் இணைக்கலாம். விக்கி நுட்பங்கள் பழக்கமானவுடன் வார்ப்புருக்களைப் (Template) பயன்படுதி, தகவல்களை சுருக்கமாக தரலாம். பட்டியல், அட்டவணை முறைகளிலும் தகவல்களைப் பகிரலாம். இறுதியாக தகுந்த பகுப்புகளுக்குள் (வகைக்குள்) அந்த கட்டுரையை இடவேண்டும். விக்கி பக்கத்தில் எ.கா பகுப்பு:அறிவியல் என்று சேர்ப்பதன் மூலம் அந்த பகுப்புக்குள் இடலாம்.

எல்லாவற்றாயும் நீங்களே செய்ய வேண்டும் என்றில்லை. மூன்று வசனங்களை இட்டால் பிற பயனர்கள் வந்து மேம்படுத்துவர். அல்லது நீங்கள் இவ்வாறு ஆக்கப்பட்ட குறுங்கட்டுரைகளை மேம்படுத்தலாம். எனவே இங்கே எழுத்து திறமை எனபதிலும் பார்க்க ஆர்வமும், ஓரளவு விக்கி நுட்பமும் தான் வேண்டும். மாணவர், துறைசாரார், எழுத்தாளர்கள். வலைப்பதிவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்கள் என எல்லோரும் தமிழ் விக்கியில் குறுங்கட்டுரைகள் ஆக்க முன்வரவேண்டும்.

– 2018-2019 போட்டி முடிவில் தமிழில் 2959 / பஞ்சாபியில் 1768 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன..இதற்குப் பிறகுதான் வங்காளி / உருது / சந்தாலி / இந்தி ஆகிய மொழிகள் வருகின்றன. இன்னும் தமிழர்கள் விக்கிபீடியாவில் நிறைய எழுதி பங்களித்தால் தமிழர்களின் இலவச அறிவுப் பகிர்தல் உச்சநிலை அடையும். விக்கிபீடியாவில் பங்களிப்பது எப்படி என்று படிப்படியாகச் சொல்லித்தரும் ஒரு பதிவினை செய்யுங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.ப்ளீஸ்.

விக்கிபீடியாவில் குறுங்கட்டுரையாக்கம் செய்வது எப்படி?

தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன.

ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்கள் எழுதுவதாகும். விக்கி இடை இணைப்புகள், விக்கி உள் இணைப்புகள், வெளி இணைப்புகள், படங்கள் ஆகியவை இணைத்து குறுங்கட்டுரையை மேம்படுத்தலாம். விக்கி இடை இணைப்பு என்பது தமிழ் விக்கி தலைப்புக்கும் பிற மொழி தலைப்புகளுக்கும் இடது பக்கத்தில் தரப்படும் இணைப்பு ஆகும். இந்த இணைப்பு ஊடாக பிற பயனர் ஆங்கில விக்கிகோ பிற மொழி விக்கிகளுக்கோ சென்று மேலும் தகவல்களைப் பெற்று கட்டுரையை விரிபுபடுத்தலாம்.

விக்கி உள் இணைப்பு என்பது தமிழ் விக்கியிலேயே இருக்கும் கட்டுரைகளுக்கு இணைப்பு தருதல் ஆகும். இது சொல்ல வந்த தலைபில் இருந்து விலகாமல், ஆனால் பயனர்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்படக்கூடிய தலைப்புகளுக்கு இணைப்பு தருவதாகும். இதுவே கலைச்சொற்களை இணைத்து தமிழில் அறிவியல் தொழில்நுட்ப கருத்துப்புலத்தை கட்டமைக்கு உதவுகின்றது.

வெளி இணைப்புகள் இணையத்தில் தலைப்பு தொடர்பாக இருக்கும் கட்டுரைகளுக்கான இணைப்புகள். சிறப்பாக தமிழ் கட்டுரைகளை தேடி இணைத்தால் பயனர்களுக்கு பயன் மிகும். தகுந்த ஒளிப்படம், விளக்கப்படம் ஆகியவற்றை இணைத்தால் கட்டுரைப் படிக்க ஆர்வத்தை தூண்டும். ஒலி, நிகழ்பட கோப்புக்களும் இருந்தால் இணைக்கலாம். விக்கி நுட்பங்கள் பழக்கமானவுடன் வார்ப்புருக்களைப் (Template) பயன்படுதி, தகவல்களை சுருக்கமாக தரலாம். பட்டியல், அட்டவணை முறைகளிலும் தகவல்களைப் பகிரலாம். இறுதியாக தகுந்த பகுப்புகளுக்குள் (வகைக்குள்) அந்த கட்டுரையை இடவேண்டும். விக்கி பக்கத்தில் எ.கா பகுப்பு:அறிவியல் என்று சேர்ப்பதன் மூலம் அந்த பகுப்புக்குள் இடலாம்.

எல்லாவற்றாயும் நீங்களே செய்ய வேண்டும் என்றில்லை. மூன்று வசனங்களை இட்டால் பிற பயனர்கள் வந்து மேம்படுத்துவர். அல்லது நீங்கள் இவ்வாறு ஆக்கப்பட்ட குறுங்கட்டுரைகளை மேம்படுத்தலாம். எனவே இங்கே எழுத்து திறமை எனபதிலும் பார்க்க ஆர்வமும், ஓரளவு விக்கி நுட்பமும் தான் வேண்டும். மாணவர், துறைசாரார், எழுத்தாளர்கள். வலைப்பதிவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்கள் என எல்லோரும் தமிழ் விக்கியில் குறுங்கட்டுரைகள் ஆக்க முன்வரவேண்டும்.

கவிஞர் இந்திரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More